ஆச்சரியமளிக்கும், விக்ஸ் வெபோரஃப்-ன் ஏழு நன்மைகள்:

Spread the love

கற்பூரம், யுகலிப்டஸ் மற்றும் பச்சை கற்பூரம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட “விக்ஸ் வெபோரஃப்” சளி மற்றும் இருமல்  தொந்தரவுகளிலிருந்து உடனடி நிவாரணம் தருகிறது. அதன் மற்ற சில நன்மை தரும் உபயோகங்களை நீங்கள் அறிவீர்களா?

 

1.கொசுத்தொல்லையிலிருந்து பாதுகாப்பு:

திறந்து வைக்கப்பட்ட “விக்ஸ் வெபோரஃப்” பாட்டில், கொசு மற்றும் பூச்சிகளை விரட்டும் சக்தி கொண்டது.  இதனை, தற்காலிகமாக கொசு விரட்டியாக்க்கூட உபயோகிக்கலாம்.

 

2.கணுக்கால் மற்றும் குதிகால் பகுதிகளை அழகாக்குகிறது:

இரவில் படுக்கச் செல்லுமுன், உங்கள் குதிகால் மற்றும் கணுக்கால் பகுதிகளில் விக்ஸ் வெபோரஃப்-ஐ தடவி, ஒரு சாக்ஸ் அணிந்து கொண்டு படுங்கள்.  மறுநாள் காலையில், குளிர்ந்த நீரால் பாதங்களைக் கழுவி, நுரைக்கல் கொண்டு தேய்க்க, பாதம் பொலிவுறும். இதனை தொடர்ந்து செய்வதால், பாதம் மிருதுவாகவும், வெடிப்புகள் நீங்கி மென்மையாகவும், அழகாகவும் இருக்கும்

 

3.அறுவைச்சிகிச்சை வடுக்கள் மறைய உதவும்:

அறுவைச் சிகிச்சை வடுக்கள் உள்ள வயிற்றுப்பகுதியில் தொடர்ந்து விக்ஸ் வெபோரஃப் தடவி வந்தால், இரு வாரங்களில், மாற்றம் கண்கூடாகத் தெரியும்.

 

4.கால்விரல் பகுதியில் ஏற்படும் காளான் அரிப்பைத் தடுக்கும்:

உங்கள் கால்விரல் பகுதியில் பூஞ்சை எனப்படும் காளான் அரிப்பு இருந்தால், இரவில் படுக்கப் போகுமுன், விக்ஸ் வெபோரஃப்-ஐ கால்விரல்களில் தடவி, ஒரு சாக்ஸ் அணிந்து படுக்கவும். மறு நாள் காலையில் குளிர்ந்த நீரால் பாதங்களைக் கழுவி, காளான் அரிப்பு ஏற்பட்டுள்ள விரல் நகத்தை,  நகவெட்டி கொண்டு வெட்டிவிடவும். இதனை தொடந்து செய்வதால், கால் விரல்கள் பூஞ்சை அரிப்பு தொல்லையிலிருந்து விடுதலைபெறும்.

 

5.புண்களால் உண்டாகும் வடுக்களும், வெடிப்புகளும் மறையும்:

புண்களின் தழும்புகள் உள்ள இடங்களில் விக்ஸ் வெபோரஃப் தடவிவர, விரைவில் அந்த வடுக்களும், வெடிப்புகளும் மறைவதைக் காணலாம். விக்ஸ் வீக்கத்தையும் குறைக்கிறது

 

6.காது வலியைக் குறைக்கிறது:

காது மடல்களிலும், காதின் உட்புறமும் விக்ஸ் வெபோரஃப் தடவி, சில மணி  நேரங்கள் வைத்திருந்தால், காதுவலி குறையும். இது காது வலி உடனடியாக குறைவதற்கான ஆலோசனைதானே தவிர, இதன்மூலம் காதுவலியோ, தொற்றோ அறவே நீங்கிவிடாது.  அதற்கு உரிய மருத்துவரை அணுகவேண்டும்.

 

7.உங்கள் முகத்தை கவர்ச்சிகரமாக பொலிவுறச் செய்யும்:

முகப்பருக்கள் மற்றும் தழும்புகளின் மீது விக்ஸ் வெபோரஃப்-ஐ தடவி இரவு முழுவதும் வைத்திருங்கள். மறு நாள் காலையில் முகத்தை கழுவிவிட்டு, மாற்றத்தைப் பாருங்கள்.  

விக்ஸின் இதர உபயோகங்கள் பற்றி நீங்கள் அறிந்திருந்தால், எங்களுக்கு தெரிவிக்கலாம்.

மூலப்படங்கள் பிளிக்ருஸ்.நிக்.ஹுயு., லைஃப் ஹேக்கர், மெற்றோரெமெடிஸ் டெ ஹோய், யூ டியூப், டிப்ஸ் அண்ட் க்ராஃப்ட்ஸ். மெடிசினாபாசிடிவா, லிட்டில் ட்ங்க்ஸ், டெய்லி மோஷன் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *