Search

Home / Home Remedies / சிறுநீர் கசிதலைத் தடுக்கும் எளிய முறை வீட்டு மருத்துவங்கள்

சிறுநீர் கசிதலைத் தடுக்கும் எளிய முறை வீட்டு மருத்துவங்கள்

Nithya Lakshmi | June 6, 2018

சிறு நீர் கசிதல் என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவான ஒரு தொந்தரவாகும்.   சிலருக்கு இது மிக துன்பமான ஒரு விஷயமாகும். முக்கியமாக, இத்தொல்லை உள்ளவர்கள்  பொதுஇடங்களில், தடுமாற்றமடைந்து சங்கடப்பட நேரிடும். சிறு நீர் கட்டுப்படுத்தமுடியாத நிலை என்பது தற்செயலானது என்றாலும், உடனடி மருத்துவ தீர்வு காணவேண்டிய விஷயமாகும்.  

என்ன பிரச்சினை இருந்தாலும், மிகுந்த பலன் தரக் கூடிய சில வீட்டு வைத்திய முறைகளினால் சிறு நீர் கசிதலை பெருமளவு கட்டுக்குள் வைக்க முடியும்:

 

1.வயதானவர்களுக்கே பெரும்பாலும் சிறுநீர் கசிதல் ஏற்படுகிறது:

வாயுப்பை வலிமையிழந்து இருப்பதாலும், நரம்பு மற்றும் தசைகள் பாதிப்பாலும், விந்துப்பை சரியாக வேலை செய்யாமலிருப்பதாலும், பெண்களின் மாதவிடாய் பிரச்சினைகளாலும், சிறுநீர்க் கசிதல் உண்டாக வாய்ப்புள்ளது.  இது மன நிரம்பிவிட்டதாலும், அவசரமாய் சிறு நீர் வருவதாலும், சிறுநீர்ப்பை நிரம்பி வரக்கூடும்

 

2.கேகல் பயிற்சி:

இடுப்புப் பகுதியை வலிவுறச் செய்யும் “கேகல்” பயிற்சி சிறு நீர் கசிதலை தடுக்கும் ஒரு சிறந்த முறையாகும்.   மூன்று நிலைகளைக் கொண்ட இப்பயிற்சி செய்வதற்கு சிறு நீர் கழிக்கும் பொழுது, நடுவில் அடக்கி, சில நிமிடங்கள் நிறுத்திய பின் வெளியேற்றவேண்டும்.  சிறு நீரை வெளியேற்ற உதவும் தசைகள் தான், அதனை அடக்கிக் கொள்ளவும், சிறிது நேரம் கழித்து வெளியேற்றவும் உதவுகிறது. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்வதால், இடுப்பு பகுதிகள் வலிடையடைந்து சிறு நீர் கசியாமலிருக்க உதவுகிறது

 

3.யோகா :

கேகல் பயிற்சி போலவே , யோகா எனப்படும் மூச்சுப் பயிற்சி இருப்பு தசைகள் வலிவடைய  உதவுகிறது. சில நேரங்களில் பதற்றத்தினால் கூட சிறுநீர் கசிதல் உண்டாகும். அப்பதற்றத்தினைக் குறைக்க யோகா பயிற்சி உதவுகிறது.  அஸ்வினி முத்திரை என்னும் ஒரு யோகா பயிற்சி, ஆசனவாயின் சுருக்குத்தசைகளை வலிவடையச் செய்கிறது. வஜ்ராசனம் மற்றும் மூல பந்தம் என்னும் யோகாப் பயிற்சிகள் இடுப்பின் கீழுள்ள பகுதிகளை வலிமையடையச் செய்கின்றன.

 

4.எடை குறைப்பு:

உடல் எடையைக் குறைப்பதன் மூலம் சிறு நீர் கசிதலை நிறுத்தமுடியும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  குறிப்பாக பெண்கள் உடல் எடையை குறைப்பதன் மூலம், இடுப்பு தசைகள் வலிவுறச் செய்து, சிறுநீர் கசிதலை நிறுத்த முடியும்.

 

5.கனமான பொருட்களை தூக்குவதைத் தவிர்க்கவும்:

 தண்ணீர் பக்கெட் போன்ற கனமான பொருட்களை தூக்குவது, இடுப்புப் பகுதியில் அதிக அழுத்தத்தை தருவதால், சிறுநீர் கசிதலைத் தூண்டுகிறது.  அதனால், கனமான பொருட்களை தூக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது

 

6.வாயுப்பைகளுக்கு (bladder)முறையான பயிற்சியளியுங்கள்:

குறித்த நேரத்தில் சிறு நீர் கழிப்பது போன்ற பழக்கங்களினால் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றுவதை தவிர்க்க முடியும்.  இது சிறுநீர் கசிவதைத் தடுக்க உதவும்

 

7.ஊசியழுத்தச் சிகிச்சை: (acupressure):

அக்குபிரஷர் எனப்படும் ஊசியழுத்தச் சிகிச்சை முறை சிறுநீர் கசிவதை தடுக்கும் ஒரு சிறந்த சிகிச்சையாகவும் மற்ற நோய்களுக்கும் ஒரு சிறந்த மாற்று மருத்துவமாகவும் திகழ்கிறது.   நமது நடுவிரலின் நடுப்புற மற்றும் மேற்புற இணைப்புகளுக்கு இடையில் உள்ள “எஸ்.பி 8” எனப்படும் இந்த புள்ளியில் விரல்களால் அழுத்துவதாலும், அல்லது அந்த இடத்தில் வெந்தயத்தை வைத்து அழுத்திக் கட்டிவிடுவதாலும் சிறு நீர் கசிதலை குறைக்க முடியும்.

 

வைட்டமின் டி மற்றும் இந்துப்பு எனப்படும் மங்கனீசியத் தாதுக்களும் தசைகள் மிருதுவாக உதவி வலிமையைக் கூட்டுவதால், சிறுநீர் தொல்லைகள் வராமல் தடுக்கும்.  நிறைந்த பலனை பெறவும், பக்க விளைவுகள் ஏற்படாமல் இருக்கவும், யோகா மற்றும் அக்குபிரஷர் எனப்படும் ஊசியழுத்த சிகிச்சையினை, ஒரு முறையான பயிற்சி பெற்ற மருத்துவரிடமிருந்து கற்றுக்கொண்டு செய்ய வேண்டும்  

மூலப்படங்கள் அன்ஸ்பிளாஸ்.காம் – இலிருந்து எடுக்கப்பட்டது

 

Nithya Lakshmi

COMMENTS (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *