முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைப் போக்குவதற்கான பத்து வகை கை வைத்தியங்கள்

Spread the love

முகச்சுருக்கம் என்பது பெண்களைப் பொறுத்தவரை  ஒருசிம்ம சொப்பனம்”.வயதானால் ஏற்படும் முகச் சுருக்கத்தைப் பற்றி கலக்கமுறாத பெண்களே இல்லை.  தான் முன்போல் இளமையாகத் தோற்றமளிக்கவில்லையே என்ற அச்சமே, பெண்களுக்கு மிகுந்த பதற்றத்தை உண்டாக்குகிறது.  அதனாலேயே, பெண்கள் எப்படியாவது முகச்சுருக்கத்தை மறைப்பதற்கு பல வழிமுறைகளைத் தேடிச் செல்கிறார்கள்

ஆனால், சில எளிய கை மருத்துவத்தின் மூலம் வீட்டிலிருந்தபடியே, முகச் சுருக்கத்தை நீக்கிவிடலாம்

1.முட்டை கோஸ் சாறு-

உபயோகிக்கும் முறை:

ஒரு முட்டை கோஸிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றுடன் பன்னீரைக் கலந்து முகத்தில் தடவவும்.  15-20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ளவும்.

 

2.மைசூர் பருப்பு முகமூடி-

உபயோகிக்கும் முறை:

மைசூர் பருப்பை தண்ணீர் விட்டு மாவுப் பதத்தில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை முகத்தில் பூசி, காயும் வரை காத்திருந்து, பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளவும்

 

3.கேரட்-

உபயோகிக்கும் முறை:

இரண்டு கேரட்களை தண்னீரில் வேக வைக்கவும்.நன்றாக வெந்தவுடன் ஒரு தேக்கரண்டி  தேனும், ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயும் கலந்து முகத்தில் பூசிக் கொள்ளவும். ஒரு மணி நேரம் கழித்து  முகத்தை கழுவிக் கொள்ளவும்

 

4.வெந்தயம்-

உபயோகிக்கும் முறை:

ஒரு கையளவு வெந்தய இலைகளை, தண்ணீர் கொஞ்சமாய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.  மாவுப்பதத்தில் அரைத்த விழுதை முகத்தில் பூசிக்கொண்டு, காயும்வரைக் காத்திருக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிக்கொள்ளவும்

 

5.தைலக்களிம்பு (Vaseline)-

உபயோகிக்கும் முறை:

இரவில் படுக்குமுன் தைலக்களிம்பை மெல்லிய அளவில் முகத்தில் பூசிக் கொள்ளவும்

குறிப்பு:  எண்ணெய் வடியும் முகத்தன்மை உடையவர்கள், இதனைத் தவிர்க்கவும்

 

6.கரும்புச் சாறு-

உபயோகிக்கும் முறை:

ஓன்றிரண்டு தேக்கரண்டி கரும்புச் சாற்றோடு ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை கலந்து முகத்தில் பூசிக் கொள்ளவும்.  ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் காய்ந்த பிறகு, இளஞ்சூடான நீரில் முகத்தை கழுவிக் கொள்ளவும்

 

7.இலவங்கப் பட்டை (cinnamon )முகமூடி-

உபயோகிக்கும் முறை:

இலவங்கப் பட்டை பொடியினை தேனுடன் கலந்து முகத்தில் பரவலாக முகமூடி போல் பூசிக் கொள்ளவும்.  பதினைந்து நிமிடங்கள் ஊறிய பிறகு இளஞ்சூடான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளவும்

குறிப்பு: இலவங்கப் பட்டை பொடி எல்லா வகை தோல்களுக்கும் பொருந்தாது.  முதலில் கொஞ்சமாக உடலில் ஓரிட்த்தில் தடவிப்பார்த்து, பின்விளைவுகள் இல்லை என்பது உறுதியானபின் உபயோகிக்கவும்..

8.முள்ளங்கி விதை முகமூடி-

உபயோகிக்கும் முறை:

ஒரு கையளவு முள்ளங்கி விதைகளை விழுதாக அரைத்து நீர் கலந்து விழுதை முகத்தில் பூசிக்கொண்டு இருபது நிமிடங்கள் ஊறவும்.  பிறகு, இளஞ்சூடான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளவும்

 

9.தக்காளி முகமூடி-

உபயோகிக்கும் முறை:

ஒரு தக்காளியை இரண்டாக நறுக்கிக் கொண்டு, ஒரு பகுதியை கல் உப்பில் கலந்து வைக்கவும். கல் உப்பில் கலந்து வைத்த தக்காளிப் பகுதியை எடுத்து முகத்தில் தேய்த்துக் கொள்ளவும்.  ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு,முகத்தை கழுவிக் கொள்ளவும்

10.அன்னாசிப்பழம்-

உபயோகிக்கும் முறை:

அன்னாசிப் பழ விழுதினை எடுத்து முகத்தில் தடவிக் கொண்டு, இருபது நிமிடங்கள் ஊறவும்.  காய்ந்தபிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ளவும்.

இப்பாது நீங்கள் முகச்சுருக்கம் குறித்து அச்சப்பட்த் தேவையில்லை.  வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே, கை வைத்தியமாக, முகச் சுருக்கத்திலிருந்து நிரந்தரமாக விடைபெற முடியும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *