அறுவைச் சிகிச்சை பிரசவத்திற்குப் பிறகு மேற்கொள்ளவேண்டிய பத்து முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள்:

Spread the love

சாதாரண பிரசவத்தைப் போலல்லாது, அறுவைச் சிகிச்சை பிரசவத்தின்  இரணங்கள் குணமாக நீண்ட நாளாகும். பெண்களின் வயிற்றுப்பகுதியில் பல்வேறு தையல்கள் போடப்படுவதால், குணமாக நீண்ட நாள் ஆகிறது.  பெரும்பாலும், பெண்கள், பிரசவம் நடந்த நான்கு வாரம் முதல் ஆறு வார காலத்தில் குணமடைகிறார்கள்.

 

நீங்கள் அறுவைச் சிகிச்சை பிரசவம் செஉது கொண்டிருந்தால், மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இதோ:

1.வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்:

உங்கள் உடல் வலிமையை பறைசாற்ற வேண்டிய தருணமல்ல, இது.  வலிப்பதாக உணர்ந்தால், பொறுத்துக் கொள்ளாமல், உடனே, வலி நிவாரணி மருந்துகளை உட்கொள்ளவும்.  சாதாரண ஜுரம், தொற்று போன்றவைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உரிய மருந்துகளை எடுத்துக்கொண்டு, நிவாரணம் பெறவும்

 

2.நிறைவாக ஓய்வெடுக்கவும்:

நிறைவாக ஓய்வெடுத்துக்கொள்வது, நமது உடல் சீக்கிரமாக குணமடைய உதவும்.  மல்லாந்து படுப்பதோ, குப்புறப்படுப்பதோ அவஸ்தையாக இருக்கும் என்பதால், எப்பொழுதும் பக்கவாட்டில் படுக்கவும்.

3.அறுவைச் சிகிச்சை முடிந்த இருபத்து  நான்கு மணிநேரத்தில்   நடைபயிற்சி மேற்கொள்ளவும்:

வலி மிகுந்தாலும், எவ்வளவு சீக்கிரம் நடை பயிற்சி ஆரம்பிக்கிறோமோ, அவ்வளவு நல்லது.   நடைபயிற்சி நல்ல பலனைத் தரும்

4.உதிரப் போக்கை கண்காணியுங்கள்:

“லோச்சியா” எனப்படும், அறுவைச் சிகிச்சை பிரசவத்திற்குப் பிந்தைய உதிரப்போக்கை கண்காணியுங்கள்.  வெவ்வேறு நிலைகளில், நிறம் மற்றும் உதிரப் போக்கின் அளவு ஆகியவை முரண்பட்டிருக்க வேண்டும்.

5.நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்:

நார்ச்சத்து மிகுந்த உணவுகள் மலச்சிக்கல், வாயுத்தொல்லை ஆகியவைகள் வராமல் காக்கும். எனவே, நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ளவேண்டியது அவசியம்.  டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் வெளியிலிருந்து வாங்கிவந்த உணவுகளை உட்கொள்ளவேண்டாம்.

 

6.உடற் புண்களை கவனமாக கையாளவும்:

புண்கள் உள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.  தொற்று வராமலிருக்க, புண்களை தொட்டு மருந்திடும் முன்னர் கைகளை நன்றாகக் கழுவவும்.   புண்களிலிருந்து பச்சை  நிற திரவம் கசிந்தாலோ, புண்களைச் சுற்றி சிவந்திருந்தாலோ, உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெறவும்.

7.இடைவெளியில்லாமல் வேலை செய்வதை தவிர்க்கவும்:

உடல் நலத்தைப் பேண உரிய ஓய்வு எடுத்துக் கொள்ளும் வகையில், உங்கள் தேக செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளுங்கள்.   அளவுக்கதிகமாக, ஓய்வின்றி உழைப்பதால், இரணங்கள் குணமாக  நாளாகும்.  அறுவைச்சிகிச்சை பிரசவம் முடிந்த உடனே, தேகப்பயிற்சி செய்ய ஆரம்பித்து விடாதீர்கள்.

8.மன உணர்ச்சிகளில் சமன்பாடு இல்லாததை உணர்ந்திருங்கள்:

பெரும்பாலும், பெண்கள் அறுவைச் சிகிச்சை பிரசவத்திற்குப் பிறகு, மாறுபட்ட மன உணர்ச்சிகளில் தடுமாறுகிறார்கள்.  எதிலும் ஈடுபாடின்றி, சோகமாக காட்சியளிப்பது, மகவீன்ற பிறகு ஏற்படும் உற்சாகமின்மையால் ஏற்படும் விளவுகளாகும்.

9.மகப்பேறு பட்டை அணிவதைத் தவிர்க்கவும்:

உங்களது உடல் தானாகவே பழைய நிலைக்கு திரும்பிவிடும்.   வயிறு சுருங்க வேண்டுமென்பதற்காக மகப்பேறு பட்டை அணிவது, பிற்காலத்தில், குடலிறக்க நோய் ஏற்பட வாய்ப்பளிக்கும்.

10.குழந்தையின் தொட்டிலை உங்கள் அருகில் வைத்திருக்கவும்:

குழந்தையின் தொட்டில், உங்கள் அருகாமையில் இருப்பது, இரவில் குழந்தைக்கு தேவைப்படும் போது பாலூட்டவும், குழந்தை தூங்குவதைக் கண்காணிக்கவும் உதவும்.

 

ஒரு சிறு அறிவுரை:

பெரும்பாலும் மருத்துவர்கள், ஆறு வார காலத்திற்கு, பாலினச் சேர்க்கை (செக்ஸ்) வைத்துக்கொள்ள வேண்டாமென்று அறிவுறுத்துவார்கள்.   இன்னமும் அதிக காலம், அதனை தவிர்ப்பது நல்லது.

மூலப்படங்கள் சிக்கோ, வெர்ஸஸ் டெக்னாலஜி, ஃப்ளெய்ர், பீ, இஸ்னா, வாட் டு எக்ஸ்பெக்ட் வென் யூ ஆர் எக்ஸ்பெக்டிங், மெட்ஸ்டோர்லேண்ட், விக்கிஹௌ, டி போர்டல், இந்தியா டுடே ஆகியவைகளிலிருந்து எடுக்கப்பட்டது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *