முப்பது வயதைக் கடந்த பெண்களுக்கான ஐந்து வகை பரிசோதனைகள்

Spread the love

வீடு முழுவதையும் பராமரிக்கும் பெண்களுக்கு அவர்கள் உடல் நலத்தை பராமரிப்பது பற்றிய எண்ணம் உள்ளதா?

பெரும்பாலும், இல்லை என்பது தான் பதில்

ஆம். வெற்றிகரமான இல்லத்தரசிகளாகத் திகழும் பல பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் நலத்தைப் பேணுவது, வீட்டைச் சுத்தமாகப் பராமரிப்பது மற்றும் துணிகளைச் சுத்தமாக துவைப்பது என்பதில் எடுத்துக்கொள்ளும் கவனத்தில், கொஞ்சமும் தமது உடல் நலத்தைப் பேணுவதில் காட்டுவதில்லை.  முன்பெல்லாம், எனக்கும் கூட, எனது உடல் நலத்தின் மீது அக்கறை இல்லாது, போதிய நேரம் இல்லாதிருந்த்து.

சமீபத்தில் மருத்துவர் ஒருவரை சந்திக்க நேர்ந்த போது, பெண்கள் வயதாகும் போது, பல்வேறு வியாதிகள் எளிதாகத் தொற்றும் உடலமைப்பு உள்ளவர்களாக உள்ளபடியால், முப்பது வயதிற்கு பேற்பட்ட பெண்கள், கீழ்கண்ட ஐந்து பரிசோதனைகளைச் செய்து கொள்வது அவசியமென்று அறிந்தேன்.

 

1.தோல் புற்று நோய் பரிசோதனை:

அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கும் முகப் பூச்சு(லோஷன்), சாயங்கள் (க்ரீம்) போன்ற பல வேதிப் பொருட்களினால், நமது தோல்கள் பாதிப்படைகின்றன.  அதனால், தோல் புற்று நோய் பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகிறது.

2.உடல் பொருண்மை எண் எனப்படும் உடல் எடை உயரம் விகிதக் குறியீடு பரிசோதனை (BMI TEST)

உடல் பொருண்மை எண் அளவீடு Body mass index (BMI)  நமது உடலிலுள்ள கொழுப்பின் அளவினை அறிந்துகொள்ள உதவும்.  பெண்களுக்கான சராசரி அளவீடு 22 ஆகும். இதைவிட உங்களுக்கு கூடுதலாக இருந்தால், உடல் பருமனாகவும், தசைகள் தளர்ந்து போகவும்  வாய்ப்பாகக்கூடும்.

 

3.மார்பகப் பரிசோதனை:

முப்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பகத்தில் கட்டி ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய மார்பகப் பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகிறது.   இப்பரிசோதனையை வெறும் கைகளினாலேயே செய்ய முடியும். மார்பக ஊடுகதிர் (MAMMOGRAPHY) மூலமாகவும் செய்துகொள்ளலாம். இப்பரிசோதனை மார்பகப் புற்று நோய் உள்ளதா மற்றும் வேறு ஏதாவது மார்பக நோய்கள் உள்ளதா எனக்கண்டறிய உதவும்.

 

4.பாப் ஸ்மியர் பரிசோதனை (Pap Smear) :

க்ரீஸ் நாட்டு உயிரணுவியலாளர் ஜார்ஜ் பபானிகொலாவ் பெயரில் அழைக்கப்படும் பேப் ஸ்மியர் பரிசோதனை கழுத்துப் பகுதியில் ஏற்படும்ம் புற்று நோய் மற்றும் எச்.பி.வி எனப்படும் வைரஸ்களின் தாக்கத்தை அறிய உதவுகிறது. இப்பரிசோதனையானது, கழுத்துப்பகுதி உயிரணுக்களைச் சுரண்டி எடுத்து, அவற்றில் அபரிமிதமான வளர்ச்சி உள்ளதா என்பதைப்பற்றி கண்டறியப்படுகிறது.

 

5.கண் பரிசோதனை:

நம் பெண்களில் பெரும்பாலோர் கணினி மற்றும் அலைபேசிகளில் அதிக நேரம் செலவிடுவதால், கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகிறது.

 

பெண்களே, இதைப் படித்த பிறகு, உங்கள் உடல் நலத்தைப் பேண உடனடியாக மருத்துவரை அணுகுவீர்கள் என்று நம்புகிறோம்

படங்களுக்கான மூலக் குறிப்பு:நேசுரல் சொஸைட்டி, எபாகாபெரிட்டா, மெடாவ்வெப்.இயு, ரோஸ்வொஜோவ்கா.சி இசெட், ஃபர்பார்மன்ஸ் வெல்னஸ் கம்பெனி, ஹெல்த் கேர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *