Home / Women Health / பெண்களின் உடலில் ஏற்படும் சுண்ணாம்புச் சத்து குறைபாட்டை போக்கும் ஆறு எளிய வீட்டு வைத்திய முறைகள்
சுண்ணாம்புச் சத்து நமது உடலுக்கு மிக முக்கியத் தேவையாகும். எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு சுண்ணாம்புச் சத்து மிக முக்கியம். இரத்தத்தை உறைய வைக்கவும்,, தசைகளில் சுருக்கம் ஏற்படாமல் இருக்கவும், சுண்ணாம்புச் சத்து உதவுகிறது ஆனால், தற்பொழுது பெரும்பாலான பெண்கள் சுண்ணாம்புச் சத்து குறைபாட்டால் அவதிப்படுவதென்பது, பொதுவான பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக, பிரசவ காலத்தில், பெண்கள் சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டால் அவதிப்படுகிறார்கள். இதனால், எலும்புகள் மிகவும் தளர்வுற்று, தேய்மானம் அடையும் அபாயத்தில் கொண்டுவிடுகிறது.
சுண்ணாம்புச் சத்து குறைபாட்டிற்கென பல்வேறு மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டாலும், நாம் அதனை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. நமது அன்றாட உணவில், சில சுண்ணாம்புச் சத்து மிகுந்த பொருட்களை சேர்த்துக் கொள்வதன் மூலம், இக்குறைபாட்டை எளிதாக நீக்கிவிடலாம்.
சுண்ணாம்பு சத்து குறைபாட்டைப் போக்கும் சில வீட்டு மருத்துவ பொருட்கள் இதோ: –
Table of Contents
பெண்களுக்கு, சுண்ணாம்புச் சத்து குறைபாட்டை நீக்கும் மிகச் சிறந்த உணவு எள்ளாகும். இதனை பொடித்து சாதத்தில் கலந்தும், சாலட்களின் மேல் தூவியும் சாப்பிடலாம். அரைத்து மாவாக எதனுடனும் கலந்து உட்கொள்ளலாம். ஒரு 100 கிராம் எள்ளில், 975 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்து உள்ளது.
(பிசின்போன்ற ஆப்பிரிக்க மர வகை)
குக்குள் ஒரு ஆயுர்வேத மருந்தாகும். இதனை தினமும் இரண்டு அல்லது நான்கு வில்லைகள் உட்கொள்வதின் மூலம், நமது உடலின் சுண்ணாம்புச் சத்து அதிகரிக்கிறது. தினமும் 200 மில்லி கிராமுக்கு குறைவாக எடுத்துக் கொள்வது சரியான பலனைத்தரும்.
கெட்டித் தயிரில் சுண்ணாம்புச் சத்து அதிக அளவில் உள்ளது. ஃப்ரோபயொடிக் பேக்டீரியா இதில் அதிகமாக உள்ளதால், உடலுக்கு அதிக நன்மை தருகிறது. ஒரு அளவான கோப்பை கெட்டித் தயிரில் 220 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்து உள்ளது. எனவே, சுண்ணாம்புச் சத்து குறைபாட்டைப் போக்க, தினமும் கெட்டித்தயிர் சாப்பிடுங்கள்.
கேழ்வரகில் அதிக அளவில் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இதனை மாவாகப் பிசைந்தோ, தானியமாகவோ உட்கொள்ளலாம். தேசிய சத்துணவுக் கழகம், 100 கிராம் கேழ்வரகில், 344 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்து உள்ளதாக பரிந்துரைத்துள்ளது.
அஸ்வகந்தா, சுண்ணாம்புச் சத்து குறைபாட்டை நீக்க, பயன்படுத்தப்பட்ட ஒரு பழமையான ஆயுர்வேத மூலிகை மருந்தாகும். இதிலிருக்கும் “வித்தாஃபெரின் ஏ” எனப்படும் வேதிப்பொருள் எலுப்பணு உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, எலும்புகளின் தாது சக்தியை கூட்டுகிறது.
ஆக்ஸிஜனேற்றத்தடுப்பான் களுக்கு, நெல்லிக்காய் பெயர்பெற்றதாகும். நெல்லிக்காயில் சுண்ணாம்புச் சத்து அதிகமாக உள்ளதால், நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனை அப்படியே பழமாகவோ, அல்லது கொதிக்கும் நீரில் கலந்தோ உட்கொள்ளலாம்.
தினமும் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்பட்ட சுண்ணாம்புச் சத்து அளவுகள்:
கீழ்வரும் அளவுகள், தினமும் எடுத்துக் கொள்ளவேண்டிய சுண்ணாம்புச் சத்து உணவுகளின் பட்டியலாகும்:
மாதவிடாய் நிற்காத இருபத்தி ஐந்து முதல் ஐம்பது வயது பெண்களுக்கும், பெண்மைச்சுரப்பி மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பெண்களுக்கும் : தினமும் 1000-1200 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்து
பிரசவிக்கப் போகும் மற்றும் பால் சுரக்கும் பெண்களுக்கு: தினமும் 1500 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்து
மூலப்படங்கள் ஒன் டே கார்ட், லைப்ரேட் பிளாக், ஸ்பிசோகிராஃபி, அர்ச்சனாஸ் கிச்சன், ஹெல்த் அன்பாக்ஸ், அர்போல், ஹெல்த் லைன்
COMMENTS (0)