Home / Women Health / பெண்கள் கவனிக்கத்தவறிவிடும், மார்பக புற்று நோய்க்கான ஏழு முன்னெச்சரிக்கை அறிகுறிகள்:
மார்பகப்பகுதிகளில் உள்ள அணுக்களின் வளர்ச்சியால், மார்பகப் புற்றுநோய் உண்டாகிறது. இந்த உபரி அணுக்கள் ஒன்றிணைந்து கட்டியாக உருவாகின்றன. இது உடலின் இதர பாகங்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. பொதுவாக பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயகரமான தொல்லை என்றாலும், இதை சரியான மருத்துவத்தின் மூலம் குணப்படுத்த முடியும்.
மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகளை இப்போது நாம் காண்போம்:
Table of Contents
மார்பகம் இயல்பிற்கு மாறாக இருப்பதை சில சமயங்களில் நாம், உணரத் தவறினாலும், மார்பகப் புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகள் கீழ்கண்டவற்றை உள்ளடக்கியது:
மார்பகப் புற்றுநோய் வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. முப்பது வயதிற்கு மேல் பிரசவிப்பது, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பது, மாதவிடாய் நின்ற பிறகு, உடல் பருமனாக அதிக எடையுடனிருப்பது போன்றவை தவிர, சீக்கிரம் வயதுக்கு வந்துவிடும் பெண்களுக்கும், மாதவிடாய் நீண்டகாலம் நிற்காமலிருக்கும் பெண்களுக்கும், பெண்மை சுரப்பிகள் அதிக அளவில் சுரந்து,மார்பக தசைகள் அதிகரிக்க உதவுகிறது. இதைத்தவிர, குடும்பத்தில் நெருங்கிய சொந்தங்களுக்கு இந்நோய் இருந்தால், பரம்பரையாகவும்
பலவகையான மார்பக புற்றுநோய்கள் உள்ளன. ஐ.டி.ஸி எனப்படும் இரத்த நாளங்களைத் துளையிட்டு ஊடுறுவும் புற்றுநோய் பொதுவானது. இவ்வகை புற்றுநோய் மற்ற தசைகளுக்கும் பரவக்கூடியது. லோபுலர் எனப்படும் புற்றுநோய் வகை, பால் கொடுக்கும் முலைக்காம்புகளில் உருவாகும். டக்டல் என்னும் ஒருவகை புற்றுநோய் இதர பாகங்களுக்கு ஊடுறவாது
மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் நவீனமடைந்து மிக தரமான சிகிச்சைகள் கிடைக்கிறது முதல் மூன்று நிலைகளில் உள்ள புற்றுநோய்களுக்கு அறுவை சிகிச்சை, கதிரியக்கச்சிகிச்சை மற்றும் சில உயர் வகை மருந்துகள் மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. புற்றுநோய்க்கான சிறப்பு மருத்துவர்கள் ஆலோசனைப்படி, மார்பகம், அக்குள், கழுத்து, கழுத்தெலும்பு, மார்பக எலும்புகள் மற்றும் நெஞ்சக்கூட்டுப் பகுதிகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது
புற்று நோய்க்கான சிறப்பு மருத்துவக் குழு உங்கள் மார்பகப் பகுதியை ஆராய்ந்து புற்றுநோயின் தன்மை, அளவு, மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களை கண்டறிந்து அதற்கேற்ற வகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது புற்றுநோய் சிறப்பு மருத்துவர் கதிரியக்க மருத்துவருடன் கலந்தோலோசித்து சிகிச்சைக்கு திட்டமிடுகிறார். இருதயம், நுரையீரல் போன்ற உடலின் மற்ற பகுதிகளை பாதிக்காதவண்ணம், குறிப்பாக பாதிக்கப்பட்ட இட்த்தில் மட்டுமே கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது, சிகிச்சை முடிந்த சில வாரங்களில் படிப்படியாக குணமகும்.
மூலப்படங்கள் காண்டினெண்டல் ஹாஸ்பிடல்ஸ், கான்ஸர்ரிசர்ஸ்யுகே, ஹிந்துஸ்தான் டைம்ஸ், மாம்ஜங்ஸன், நேஷனல் டெய்லி போன்றவற்றிலிருந்து எடுக்கப்பட்ட்து
COMMENTS (0)