Search

Home / Kids Health / குடற்புழுக்களிலிருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி

குடற்புழுக்களிலிருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி

Nithya Lakshmi | June 8, 2018

வயிற்று வலி குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் ஒரு தொந்தரவு ஆகும்.  குழந்தைகள் வயிற்று வலி என்று கூறினால், பெற்றொர்கள் அது பள்ளிக்குச் செல்லாமல் இருக்க நட்த்தப்படும் நாடகம் என்றே நினைக்கிறார்கள்.   ஆனால், உங்கள் குழந்தை நிஜமாகவே வயிற்று வலியினால் அவதிப்பட்டால், அதனை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். குடலில் உருவாகும் புழுக்களே இதற்கு முக்கிய காரணம்.    இந்த குடற்புழுக்கள், வயிற்றில் தங்கி, வயிற்றில் செல்லும் உணவின் சத்துக்களை தான் எடுத்துக் கொண்டுவிடும். இதனால், பதற்றமடைய வேண்டாம். குழந்தைகளுக்கு வயிற்றுவலி பொதுவாக வரக்கூடியது. இதற்கு பல சிகிச்சைகள் உள்ளன.

 

குழந்தைகளுக்கு குடற்புழு உண்டாகக்  காரணம்:

  • அழுக்கான இடங்கள் மற்றும் அழுக்கான மிருகங்களுடன் பழகுவது
  • அழுக்கான விரல்களை வாயில் வைத்துக் கொள்வது
  • அழுக்கான ஆடைகளை அணிந்து கொள்வது. அழுக்கான படுக்கையில் படுப்பது
  • மாசு நிறைந்த தண்ணீரைக் குடிப்பது

குழந்தைகள் அடிக்கடி வயிற்றுவலியால் துடிப்பதும், அவர்களின் எடை குறைவதும், குடற்புழு இருப்பதற்கான அறிகுறிகள்.   இதைத்தவிர, பல குறிப்புகள் மூலம் குடற்புழு இருப்பதை அறிய முடியும். குமட்டல், பசியின்மை, சத்துக் குறைபாடு, மஞ்சள் காமாலை, நாடித் துடிப்பு, மலங்கழிக்கும் பொழுது உண்டாகும் எரிச்சல், பேதி, இருமல், ஜுரம் மற்றும் உடலின் இரத்த அளவு குறைதல் போன்றவைகளும் குடற்புழு இருப்பதற்கான அறிகுறிகள்.

 

குட்ற்புழு வராமல் தடுக்க எளியமுறை வீட்டு வைத்தியங்கள்:

குடற்புழுவிற்கு, மருத்துவரிடமும் சென்று ஆலோசனை பெறலாம்.  இந்த வீட்டு வைத்திய முறைகளும், சிறந்த பலனளிக்கூடியதே.

 

1.கேரட்:

கேரட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, குழந்தைகளுக்கு குடற்புழு வராமல் காக்கிறது.  குழந்தைகள் வெறும் வயிற்றில் கேரட் உட்கொள்வது மிகச் சிறந்த பலனைக் கொடுக்கும்.

 

2. தேங்காய்:

தினசரி காலை உணவோடு ஒரு ஸ்பூன் துருவிய தேங்காய் கொடுப்பது, குழந்தைகள் வயிற்றில் குடற்புழு வராமல் காக்கும்.

 

3.சீரகம்:

அரை டீஸ்ஃபூன் தண்ணீரில், வெல்லம் சேர்த்து சீரகப் பொடியை கலந்து, தினமும் இருவேளை குழந்தைகளுக்கு கொடுத்தால், குடற்புழு தொல்லை அண்டாது.

 

4. பெருங்காயப் பொடி:

ஒரு டப்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை பெருங்காயப் பொடி கலந்து குழந்தைகளுக்கு தினமும் காலையில் கொடுத்துவர, குடற்புழுக்கள் உருவாகாமல் காக்கலாம்.

 

5.பப்பாளிப்பழம்:

பப்பாளிப்பழச் சாற்றை எடுத்து ஒரு டீஸ்ஃபூன் தேன் மற்றும் 4 டீஸ்ஃபூன் தண்ணீர் கலந்து நன்றாக குலுக்கி, தொடர்ந்து ஒரு வாரகாலம் குழந்தைக்கு கொடுத்துவந்து, தென்படும் மாற்றத்தைக் காணுங்கள்.

குறிப்பு: இரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுக்க வேண்டாம்

 

மூலப்படங்கள் ரிவால்வ் ஃப்ரெஸ், க்வோரா, என்பிஆர், ஆர்கானிக் ஃபாக்ட், கூகிள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது

 

Nithya Lakshmi

BLOG TAGS

Kids Health

COMMENTS (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *