Home / Uncategorized / இல்லங்களில் நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் “வாஸ்து” குறித்த ஏழு ஆலோசனைகள்:
“வாஸ்து” என்பதே அதற்கான பதில். “வாஸ்து” நம் இல்லங்களில் நேர்மறை எண்ணங்களையும், வளத்தையும் வரவழைக்கிறது.
இதோ, உங்களுக்காக சில எளிய, கவர்ச்சிகரமான “வாஸ்து” ஆலோசனைகள்:
Table of Contents
உங்கள் வீட்டு நுழைவு வாயிலுக்கு நேராக சுவர் இருந்தால், அதனை வெறுமையாக விட்டு வைக்காதீர்கள். வெறுமையான சுவர் தனிமை, துன்பம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை தோற்றுவிக்கும். உங்கள் கைவண்ணத்தால், வண்ணங்கள் படங்கள் போன்றவற்றாலோ அல்லது கடவுள் படங்களைக் கொண்டோ, அந்தச் சுவற்றை அழகுபடுத்துங்கள்.
உங்கள் படுக்கையறையில் தினமும் காலையில் சூரிய வெளிச்சம் பரவும்படி அமைத்துக்கொள்ளுங்கள். தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது சுத்தமான காற்றை சுவாசியுங்கள். படுக்கையறையில் மிகத் தேவையான சாமான்களை மட்டும் உபயோகப்படுத்துங்கள். திருமணமான தம்பதிகள் உள்ள வீடுகளில் ஒரே படுக்கை கொண்ட கட்டிலை உபயோகிப்பது ஸ்திரத்தன்மையை கூட்டும். நமது நிழலை நாம் கண்ணாடியில் காணக்கூடிய வகையில் படுக்கையினை அமைத்துக் கொள்ளாதீர்கள். படுக்கையினை அறையில் மூலைகளிலோ, சுவற்றில் படும்படியாகவோ போடக்கூடாது.
பிரதான நுழைவு வாயிலில் நமது பெயர்ப் பலகையை வைத்துக் கொள்வது, நமது அடையாளம், உணர்ச்சிகள் மற்றும் சொத்துக்களில் உள்ள சங்கடங்களை நீக்கும் சக்தி கொண்டது. அழகிய, தெளிவான ஒரு பெயர் பலகை நுழைவு வாயிலில் இருந்தால், அது பல நல்ல வாய்ப்புகளை உருவாக்கித்தரும்.
திபெத்திய “வாஸ்து” மணி வகைகள் இல்லத்தில் உறுதியையும், நேர்மறை எண்ணங்களையும் தோற்றுவிக்கும். இவை, வீட்டில் நோய்களை அண்டவிடாமல், இரம்மியமாக வைத்திருக்க உதவும்
சுத்தமான இல்லங்களில் தான் லட்சுமி வாசம் செய்வதாக நாம் எல்லோரும் அறிவோம். எதிர்மறை எண்ணங்களை உருவாக்கி, மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும், அழுக்குத் துணிகள், படுக்கைகள், உடைந்த கண்ணாடிகள் மற்றும் உபயோகமற்ற பொருட்களை வீசி எறியுங்கள். உடைந்த பொருட்கள் குடும்பத்திலும், நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரிடம் கொண்ட உறவில் விரிசலை உண்டாக்கும்.
நீந்தும் மீன்கள் செல்வம் வருவதை குறிக்குமாதலால், வீட்டில் ஒரு மீன் தொட்டி வையுங்கள். மீனின் உருவ பொம்மையை வைத்திருப்பதும், நன்மைதரும். ஆனால், மீன் தொட்டியை மிக சுத்தமாக பராமரியுங்கள்
நீரும், நெருப்பும் இணைந்து இருக்கும் ஒரே இடமான நம் வீட்டு சமையலறை திறம்பட அமைக்கப்பட வேண்டும். நீர், நெருப்பு இரண்டும் ஒன்றுக்கொன்று இடர் விளைவிக்காத வகையில் உங்கள் சமையலறையின் அமைப்பை திட்டமிடுங்கள். சுருக்கமாகச் சொன்னால், உங்கள் வீட்டில் எரிவாயு இணைப்பும், தண்ணீர் குழாய்களும் அருகருகே அமையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
மூலப்படங்கள் டிசைன் டெகார் அண்ட் திஷா, மாடர்ன் லிவிங் ரூம், ஸ்பெக்ட்ராஹட், அமேசான்.காம், சேஜ் இண்டஸ்ட்ரியல், தெ பிஷப் மற்றும் மை டேஸ்டி ஜர்னி ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது.
COMMENTS (0)