தொப்பையைக் குறைக்க உதவும் யோகாசனங்கள்

Spread the love

உலகம் முழுவதும் உள்ள பெண்களின் ஒட்டுமொத்த நினைப்பெல்லாம், தொப்பையில்லாத தட்டையான வயிறு  இருக்க வேண்டுமென்பதுதான். தொப்பை நம் அழகான உடலமைப்பை குலைப்பதுடன், நாம் நம் விருப்பப்படி ஆடைகளை அணிய முடியாமல் செய்கிறது.  வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் மாறிவரும் இன்றைய சூழ்நிலையில் நாம் பலவித நோய்களுக்கு ஆளாகிறோம், அதில் ஒரு நோய் தான் உடற்பருமன்.  வயிற்றில் கொழுப்புச்சத்து கூடுவதால் உடற் பருமன் ஏற்படுகிறது. பெண்கள், தொப்பையை குறைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறார்கள்   பத்திய உணவு, தீவிர உடற்பயிற்சி, பசியோடிருத்தல் மற்றும் கொழுப்பைக் குறைக்கும் அறுவை சிகிச்சை என பல விதங்களில் முயற்சி செய்கிறார்கள்.

ஆனால், இவை எதுவுமே செய்யத்தேவையில்லை.  நீங்கள் முறையாக யோகாசனப் பயிற்சிகளை செய்துவந்தால் போதும்.  

தொப்பையைக்குறைக்கும் சில யோகாசனப்பயிற்சி முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:  

 

1) பிறை நிலவு தோற்றம்:

தொப்பையைக் குறைக்க இந்த வகை யோகாசனம் மிகவும் உதவுகிறது.  இதன் செய்முறை:

முதல் நிலை: 

கால்களை அகல விரிக்கவும்

 

இரண்டாம்நிலை:

உங்கள்  வலது காலை முன்னோக்கி மடக்கி, அத்திக்கில் உடலை சாய்க்கவும்

 

மூன்றாம் நிலை:

கைகள் இரண்டையும் மேலே உயர்த்தி, மூச்சை இழுத்து விடவும்

 

நான்காம் நிலை:

இப்போது இடது காலை முன் நோக்கி மடக்கி, தொடரவும்.

 

2) படகுத்தோற்றம்: 

படகு தோற்ற யோகாசனம் செய்வதால் உடல் வலிமை பெறுகிறது, தொப்பையும் குறைகிறது.

முதல் நிலை: 

தரையில் அமர்ந்து உங்கள் கால்களை மடக்கவும்.

 

இரண்டாம்நிலை

கால்களை மெதுவாக மேலே உயர்த்தி, ஒரு ஐந்து நிமிடங்கள் அப்படியே இருக்கவும்

 

மூன்றாம் நிலை:

இந்தப் பயிற்சியினை, இன்னும் கடினமாக செய்ய விரும்பினால், உங்கள் கைகள் இரண்டையும் மேலே உயர்த்தியவாறு கால்களை தரைக்கு சமமாக    நேர்க்கோட்டில் உயர்த்தியவாறு ஒரு ஐந்து நிமிடங்கள் மூச்சை நிதானமாக உள்ளிழுத்து, வெளிவிடவும்

 

3) பலகை

பலகை நிலை யோகாசனம், உங்கள் உடம்பின் உட்பகுதிக்கு வலிமையும், வயிற்றிலுள்ள கொழுப்புகளை நீக்கவும், பயன்படுகிறது

முதல் நிலை:

உங்கள் பாதங்களின் மீது அமரவும்

 

இரண்டாம் நிலை:

முன்னோக்கி சரிந்து ஒருகாலை பின்னோக்கி நன்றாக  நகர்த்தவும்

 

மூன்றாம் நிலை:

பிறகு இரண்டு கால்களையும் பின்னோக்கி  நகர்த்தவும்

 

4) காலை உயர்த்துதல்

இதன்மூலம், தொப்பை குறைவதோடு நமது முதுகெலும்பு வலுவடைகிறது  

முதல்  நிலை:

தரையில் நேராக படுத்துக்கொள்ளவும்

 

இரண்டாம் நிலை:

ஒரு காலை நேராக உயர்த்தி, கழுத்தை இலேசாக மேலே உயர்த்தவும்.  பிறகு, மற்றொரு காலை உயர்த்தி, இதே போல் செய்யவும்.

 

5) பாலம் போல் உயர்த்துதல்

மேற்கண்ட யோகாசனங்களை செய்த பிறகு இந்த யோகாசனம் உங்கள் உடலை நீட்சியடையச் செய்கிறது.  

தரையில் நேராக படுத்து, கால்களை மடக்கி, கைகளை நேராக நீட்டி, உங்கள் உள்ளங்கைகள் தரையில் அழுத்தியவாறு படுக்கவும்

 

முதல்  நிலை:

இப்போது உங்கள் உடலை மேலே உயர்த்தி கைகள் இரண்டையும் இணைத்துப் பிடித்துக் கொள்ளவும்.  மூச்சை வெளிவிடும் போது மெதுவாக உடலை பழைய நிலைக்கு கொண்டுவரவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *