Home / Recipes / Coconut Sevai

Photo of Coconut Sevai by Janaki Priya at BetterButter
1175
3
0.0(0)
0

Coconut Sevai

Oct-10-2017
Janaki Priya
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Steaming
  • Sauteeing
  • Breakfast and Brunch
  • Low Calorie

Ingredients Serving: 4

  1. உதிர் இடியாப்பம்/ரெடிமேட் அரிசி சேவை - 2  கப் (நான் வீட்டில் தயாரித்த இடியாப்பத்தை உபயோகித்தேன்)
  2. துருவிய தேங்காய் - 1 கப்
  3. எண்ணெய் -2 தேக்கரண்டி
  4. கடுகு - 1/4 தேக்கரண்டி
  5. உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  6. கடலை பருப்பு- 1 தேக்கரண்டி
  7. சிகப்பு மிளகாய்- 3
  8. பச்சை மிளகாய்- 3
  9. பெருங்காயத்தூள் - சிறிதளவு
  10. துருவிய இஞ்சி - சிறிதளவு
  11. கறிவேப்பிலை- சிறிதளவு

Instructions

  1. வீட்டில் தயாரித்த இடியாப்பத்தை உபயோகிப்பதாக இருந்தால் அது ஆறிய பின் சிறிது சிறிதாக உதிர்த்து வைத்து கொள்ளவும்.
  2. ரெடிமேட்  சேவையை உபயோகிப்பதாக இருந்தால் அதில் குறிப்பிட்டுள்ள படி வேக வைத்து எடுக்கவும்.
  3. சூடான வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு சேர்த்து,அது பொரிந்தவுடன், உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு, கறிவேப்பிலை, சிகப்பு மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்
  4. பின் இதனுடன் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி துருவலையும் சேர்த்து வதக்கவும்.
  5. தற்போது துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அதனுடைய பச்சை வாசனை போகும் வரை மிதமான சூட்டில் வதக்கவும். தேங்காய் கருகாமல் பார்த்து கொள்ளவும்.
  6. பின் இதனுடன் உதிர்த்த இடியாப்பம்/ சேவையை சேர்த்து கிளறவும். தீயை அணைத்து பின் அப்படியே 5 நிமிடம் வரை மூடி வைக்கவும்.
  7. சுவையான தேங்காய் இடியாப்ப சேவை தயார். இதனை தேங்காய் சட்னி அல்லது காரமான தக்காளி சட்னி உடன் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE