Home / Recipes / Foxmillet Pumpkin Fried Rice

Photo of Foxmillet Pumpkin Fried Rice by Sowmya Sundar at BetterButter
624
3
0.0(0)
0

Foxmillet Pumpkin Fried Rice

Nov-28-2017
Sowmya Sundar
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Foxmillet Pumpkin Fried Rice RECIPE

மஞ்சள் பூசணிக்காய் கொண்டு செய்யப்படும் இந்த ரைஸ் சீனா,தாய்லாந்து நாட்டில் பிரபலமானது. க்யுன்வா(quinoa) வகை அரிசி பயன்படுத்தி செய்வார்கள். அந்த அரிசி நமது திணையரிசி போன்றது. அதனால் சிறு மாறுதலுடன் நான் திணையரிசி கொண்டு செய்துள்ளேன்.சத்தான ஒரு வகை ரைஸ் இது.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Thai
  • Pressure Cook
  • Sauteeing
  • Main Dish
  • High Fibre

Ingredients Serving: 3

  1. திணையரிசி - 1 கப்
  2. மஞ்சள் பூசணி- 1/2 கப்
  3. நறுக்கிய பச்சை மிளகாய் - 2
  4. நறுக்கிய வெங்காயம்- 1/4 கப்
  5. காரட் -1 (நறுக்கியது)
  6. குடைமிளகாய்- 1(நறுக்கியது)
  7. நறுக்கிய பூண்டு- 1 டேபிள்ஸ்பூன்
  8. பச்சை பட்டாணி- 1 பிடி
  9. வெங்காயத்தாள் - சிறிது
  10. சோயா சாஸ்- 1 டீஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. வெள்ளை மிளகு தூள்- 1 டீஸ்பூன்
  13. ஆலிவ் எண்ணெய்/ சமையல் எண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன்
  14. காய்கறி ப்ராத் செய்ய தேவையானவை:
  15. இங்கலீஷ் காய்கறிகள்(பீன்ஸ், காரட்,வெங்காயம், பூண்டு, சிலரி முதலிய)

Instructions

  1. காய்கறி ப்ராத் செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் (அளவு தேவை இல்லை) ஊற்றி காரட்,பீன்ஸ், வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வேகவிட்டு வடிகட்டி கொள்ளவும். இந்த நீரே காய்கறி ப்ராத். அரிசி வேக வைக்க இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் . வடிகட்டிய காய்கறிகளை ஏதேனும் சூப் செய்ய பயன்படுத்தி கொள்ளலாம்.
  2. திணையரிசியை நன்றாக களைந்து பின்னர் காய்கறி ப்ராத் (1.5 கப் சேர்த்து ,உப்பு சேர்த்து உதிராக வேக விட்டு கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். தீயை ஹையில் வைத்துக்கொண்டு மஞ்சள் பூசணி,காரட், குடைமிளகாய் பட்டாணி சேர்த்து 2 நிமிடம் வரை நன்கு வதக்கவும் .
  4. உப்பு, மிளகு தூள் ,சோயா சாஸ் சேர்த்து கொள்ளவும்.
  5. பின்னர் வேக வைத்த திணையரிசி சேர்த்து நன்கு அரிசி வறுபடும் வரை 2 நிமிடம் வதக்கி இறக்கவும்.
  6. வெங்காயத்தாள்,கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE