Home / Recipes / Tandoori Fish

Photo of Tandoori Fish by Ayesha Ziana at BetterButter
340
3
0.0(0)
0

Tandoori Fish

Dec-07-2017
Ayesha Ziana
45 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Tandoori Fish RECIPE

அயிலை மீன் வைத்து செய்த எளிமையான தந்தூரி

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Side Dishes

Ingredients Serving: 3

  1. முழு அயிலை மீன் 3
  2. எண்ணெய் தேவைக்கு
  3. ஊற வைக்க: மிளகாய் தூள் 1 1/2 ஸ்பூன்
  4. காஷ்மீரி மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  5. மல்லி தூள் 1/4 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  8. சோம்பு பொடி 1 ஸ்பூன்
  9. மிளகு தூள் 1/2 ஸ்பூன்
  10. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  11. எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
  12. தண்ணீர் தேவைக்கு

Instructions

  1. அயிலை மீனை வால் மற்றும் வாய் ஓரம் பகுதியில் மட்டும் வெட்டி கழிவகற்றி சுத்தப்படுத்தவும். தேவைப்பட்டால் தலையும் நீக்கி விடலாம். பின்னர் மசாலா ஏற்க மீனில் நீளமாக கீறல்கள் ஏற்படுத்தவும்.
  2. அதன் பின்னர் ஊற வைக்க கொடுத்துள்ள மசாலாவில் மீனை நன்றாக புரட்டி குறைந்தது 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி மீனின் இரு பக்கமும் லேசாக பொரித்து எடுக்கவும். நன்றாக வேக தேவையில்லை. இரு பக்கமும் திருப்ப முடிந்த அளவு வெந்தால் போதும்.
  4. பின்னர், ஒரு இடுக்கி அல்லது 2 கரண்டிகளின் உதவியால் மீனைப் பிடித்து நேரடியாக கேஸ் தீயில் காட்டவும். எல்லா பக்கமும் நன்றாக வேக வைக்கவும். அருமையான ஸ்மோக்கி மணம் வரும்.
  5. மீனின் உள்பக்கம் உட்பட அனைத்து பாகமும் வெந்ததும் தட்டில் வைத்து சூடாகப் பரிமாறவும்.
  6. அட்டகாசமான தந்தூரி மீன் தயார். இது பார்ட்டிக்கு பரிமாற ஒரு சிறந்த டிஷ்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE