Home / Recipes / Sugarless Mixed Fruit Kesari

Photo of Sugarless Mixed Fruit Kesari by Ayesha Ziana at BetterButter
533
3
0.0(0)
0

Sugarless Mixed Fruit Kesari

Dec-08-2017
Ayesha Ziana
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sugarless Mixed Fruit Kesari RECIPE

சீனி/வெல்லம் எதுவும் சேர்க்காமல் முழுக்க பழங்களை வைத்தே செய்த மிகவும் ருசியான கேசரி. இது என்னுடைய சொந்த ரெசிபிகளில் ஒன்று.

Recipe Tags

  • Easy
  • Dinner Party
  • Sauteeing
  • Dessert

Ingredients Serving: 10

  1. ரவை 1 கப்
  2. கொய்யாப்பழம் 1/2 கப்(தோல் உரித்து பொடியாக நறுக்கியது)
  3. பேரீட்சை 30 அல்லது தேவைக்கு
  4. செவ்வாழைப்பழம் 2
  5. அண்டி, கிஸ்மிஸ் 15 முதல் 20
  6. தட்டிய ஏலக்காய் 2
  7. நெய் 4 டேபிள் ஸ்பூன்
  8. தண்ணீர் 3 கப்

Instructions

  1. வாணலியில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, விதை நீக்கிய பேரீட்சை சேர்த்து மூடி, 5 முதல் 7 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து சிறிது நேரம் கழித்து லேசாக ஆறியதும், பேரீட்சையை நன்றாக பிழிந்து கொள்ளவும். 2 கப் பேரீட்சை தண்ணீர் கிடைக்கும். அதை தனியே எடுத்து வைக்கவும்.
  2. நான்ஸ்டிக் பேனில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அண்டி, கிஸ்மிசையும், அதன் பின்னர் ரவையையும் வறுத்து எடுத்து கொள்ளவும்.
  3. அதே பேனில் பேரீட்சை தண்ணீர் சேர்த்து, பின்னர் கொய்யாப்பழம் சேர்த்து 3 முதல் 5 நிமிடங்கள் வேக விடவும். அதன் பின்னர் பொடியாக நறுக்கிய செவ்வாழைப்பழத்தையும் சேர்த்து மீண்டும் 3 முதல் 4 நிமிடங்கள் வேக விடவும்.
  4. பின்னர் ரவையையும் சிறிது சிறிதாக சேர்த்து கை விடாமல் கிளறி கொண்டே இருக்கவும். மீதமுள்ள நெய்யையும் இடையிடையே ஊற்றி கிளறவும்.
  5. தட்டிய ஏலக்காய் சேர்க்கவும். கலவை ஒட்டாமல் வரும்போது வறுத்த அண்டி, கிஸ்மிஸ் சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
  6. நெய் தடவிய தட்டில் கலவையை தட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.
  7. செவ்வாழைப்பழம், பேரீட்சையின் இனிப்பே தாராளம் போதுமானது. கொய்யாவின் லேசான புளிப்பும் ருசியைச் சமன் செய்து சீனி சேர்க்காததே தெரியாத அளவு மிகவும் ருசியாக இருக்கும். பார்ட்டிகளில் செய்தும் விருந்தினரை அசத்தலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE