Home / Recipes / Masal dosa with Peas Stuffed

Photo of Masal dosa with Peas Stuffed by Adaikkammai Annamalai at BetterButter
237
9
0.0(0)
0

Masal dosa with Peas Stuffed

Dec-12-2017
Adaikkammai Annamalai
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Masal dosa with Peas Stuffed RECIPE

செட்டிநாடு பகுதியில் எடை பலகாரம் என சொல்லுவார்கள் சாயங்கால விருந்தை ... அதில் இந்த மசாசல் தோசை கண்டிப்பாக இருக்கும்.... இது நம் விருப்பம் உள்ளதே எதை வேண்டுமானாலும் அமுக்கலாம் ... மஷ்ரூம்.., உருளை., எதை வேண்டுமானாலும் உள்ளடக்கலாம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • South Indian
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 3

  1. பட்டானி -1 கப்
  2. எண்ணெய் - 3 ஸ்பூன்
  3. வெங்காயம் - 2
  4. தக்காளி - 2
  5. உளுந்து பருப்பு. - 1 ஸ்பூன்
  6. கடுகு - 1 ஸ்பூன்
  7. சோம்பு. - 1 ஸ்பூன்
  8. பூண்டு பேஸ்ட். - 2 ஸ்பூன்
  9. தேங்காய் பால். - 1 கப்
  10. மஞ்சள்தூள். - 1 ஸ்பூன்
  11. தேங்காய் பால். - 1/4 கப் கெட்டியாக
  12. தோசை மாவு. - தேவையான அளவு
  13. அரைத்து எடுக்கவேண்டிய பொருட்கள் வரமிளகாய் - 7 சோம்பு - 1 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் தேங்காய் பூ துருவல் - 1/4 கப் இஞ்சி. - சிறுதுண்டு வெங்காயம் - 1/2 தக்காளி. - 1/2 இவை அனைத்தையும் நன்கு மிசியில் அரைத்து எடுத்து கொள்ளவும்.

Instructions

  1. முதலில் அரைக்க வேண்டிய அனைத்தையும் அரைத்து எடுத்து கொள்ளவும்.
  2. குக்கரில் பட்டாணியை 3 சவுண்ட் 5 நிமிடம் வேகவைத்து எடுத்து வடிக்கட்டி, தண்ணியை கீழே ஊற்ற வேண்டும்..
  3. பின் ஒரு இருப்பு சட்டியில் எண்ணெய் 3 ஸ்பூன் ஊற்றி .,. நன்கு எண்ணெய் காய்ந்த பின் கடுகு.., உளுந்து.. சோம்பு ...போட்டு பொரித்து வெங்காயம்.. தக்காளி போட்டு வதக்கி அதனுடன் பூண்டு பேஸ்ட்.. மஞ்சள்தூள் ..உப்பு போட்டு வதக்கவும் நன்கு...
  4. வதங்கிய பின் பட்டாணியை போட்டு வதக்கி அரைத்தக் விழுதை கொட்டி வதக்கவும்.
  5. பின் அதில் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விட்டு பிரட்டி அள்ளவும். தேங்காய் பால் கட்டாயம் இல்லை ... சேர்த்தால் சுவை அதிகமாயிருக்கும்.... இல்லையென்றால் தண்ணி ஊற்றி கொள்ளாம்....
  6. தோசை மாவு எடுத்து கல்லில் தோசையை ஊற்றி தோசை முன்னும் பின்னும் வெந்தபின் அதில் ரெடி செய்து வைத்த மசாலாவை வைத்து மூடி அமிக்கி பரிமாறவும்....
  7. பட்டாணி வேக வைத்த தண்ணி, வாய்வு அதனால் அதை சமையலில் சேர்க்கக்கூடாது. ஊற்றிடவேண்டும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE