Home / Recipes / White vegetable kuruma....

Photo of White vegetable kuruma.... by Sony Karthik at BetterButter
349
8
0.0(0)
0

White vegetable kuruma....

Feb-18-2018
Sony Karthik
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Healthy

Ingredients Serving: 4

  1. 2தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  2. 3ஏலக்காய்
  3. சிறிதளவு பட்டை
  4. 1 பிரியாணி இலை
  5. 1 சில் தேங்காய்
  6. 3 பல் பூண்டு
  7. சிறிதளவு இஞ்சி
  8. 2 பச்சை மிளகாய்
  9. 20 முந்திரி பருப்பு
  10. 1 பெரிய வெங்காயம்
  11. 1 மேஜை கரண்டி பெருஞ் சீரகம்
  12. 1 மேஜை கரண்டி தனியா
  13. சிறிதளவு கொத்தமல்லி
  14. தேவைகேற்ப உப்பு
  15. 3 டம்ளர் தண்ணீர்

Instructions

  1. தேவையான காய்கறிகள் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்..
  2. காய்கறிகளை பொடியாக நறுக்கி குக்கரில் போட்டு தேவைக்கேற்ப உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மூடி 4விசில் வைக்கவும்......
  3. 1சில் தேங்காய் பொடியாக நறுக்கி கொள்ளவும், 1 பெரிய வெங்காயம் தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும்,2 பச்சை மிளகாய் நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும், 1 மேஜைக்கரண்டி பெருஞ்சீரகம்,1 மேஜைக்கரண்டி தனியா எடுத்து கொள்ளவும்,3 பல் பூண்டு,சிறிதளவு இஞ்சி,20முந்திரி பருப்பு எடுத்து கொள்ளவும்..
  4. மேலே குறிப்பிட்ட பொருள்களுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மை போல் அரைத்து எடுத்து கொள்ளவும்..
  5. கடாயில் 2தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் 4 ஏலக்காய் சிறிதளவு பட்டை சிறிதளவு பிரியாணி இலை போட்டு வதக்கவும்... அரைத்து வைத்துள்ள கலவையை சேர்க்கவும்.... பிறகு 2நிமிடம் கொதிக்க வைக்கவும்......
  6. கொதி வந்ததும் வேகவைத்துள்ள காய்கறிகளை போட்டு நன்றாக கிளறி விடவும்,10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும்.
  7. நன்றாக நுரை கட்டி வந்ததும் கொத்தமல்லி இலையை போட்டு இறக்கவும்....
  8. இப்போது ருசியான வெள்ளை காய்கறி குருமா ரெடி........

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE