Home / Recipes / Veggie Petties

Photo of Veggie Petties by khadheeja irfana at BetterButter
1199
3
0.0(0)
0

Veggie Petties

Feb-27-2018
khadheeja irfana
15 minutes
Prep Time
59 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Veggie Petties RECIPE

சுவையான காய்களின் சத்துக்கள் நிறைந்த மாலை நேர திண்பண்டம்

Recipe Tags

  • Medium
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 6

  1. பெட்டிஸ் மாவு சேர்க்க:
  2. மைதா - 1/2 கிலோ
  3. எண்ணெய் - 100 மில்லி
  4. தண்ணீர் - தேவைக்கு
  5. உப்பு - சுவைக்கேற்ப
  6. உள் அடக்கம் செய்ய :
  7. எண்ணெய் - 1 மே. க
  8. வெங்காயம் - 1/2 கி
  9. கேரட் - 200 கி
  10. உருளை - 200 கி
  11. பச்சை பட்டாணி - 100 கி
  12. இஞ்சி பூண்டு விழுது - 1 மே. க
  13. மிளகாய் தூள் - 1 தே. க
  14. காரம்மசாலா - 1 தே. க
  15. பச்சமிளகாய் - 2
  16. உப்பு - சுவைக்கேற்ப
  17. கருவாபிள்ளை - சிறிது
  18. கொத்தமல்லி இலை - சிறிது
  19. எண்ணெய் - பொரிப்பதற்கு

Instructions

  1. மாவு சேர்க்க தேவையான பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு சேர்த்து 15 நிமிடம் மூடி வைக்கவும்.
  2. காய்கறிகளை வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கி அதோடு கருவாபிள்ளை,பச்சமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. பின்பு அதில் வேக வைத்த காய்கறிகளை சேர்த்து மிளகாய் தூள்,உப்பு,கரம்மசாலா சேர்த்து வதக்கவும்.கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.உள் அடக்கம் தயார்.
  5. பெட்டிஸ் மாவு சேர்த்து வைத்ததை சிறு சிறு உருண்டைகளாய் உருட்டி வைக்கவும்
  6. சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து உள் அடக்கம் வைத்து விருப்பமான வடிவத்தில் மடிக்கவும்.
  7. எல்லா உருண்டைகளையும் அடக்கம் வைத்து மடித்து தயார் செய்து கொள்ளவும்.
  8. பொரிப்பதற்கு வடை சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் பெட்டீஸை போட்டு பொரித்து எடுக்கவும்.சுவையான காய்கறி பெட்டிஸ் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE