Home / Recipes / Laapai

Photo of Laapai by Yasmin Shabira at BetterButter
382
3
0.0(0)
0

Laapai

Feb-27-2018
Yasmin Shabira
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Laapai RECIPE

காய்கறிகள் ஸ்டஃப் செய்த சப்பாத்தி சாண்ட்விச்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Pan fry
  • Sauteeing
  • Main Dish

Ingredients Serving: 4

  1. கோதுமை மாவு : 1 1/2 கப்
  2. மைதா மாவு : 1 1/2 கப்
  3. உப்பு : சிறிது
  4. ஸ்டஃபிங் செய்ய தேவையானவை::
  5. வெங்காயம் - 4
  6. தக்காளி - 2
  7. கேரட் : 250 கிராம்
  8. பச்சை பட்டாணி : 1 கப்
  9. இஞ்சி பூண்டு விழுது : 2 மேசைக்கரண்டி
  10. மிளகாய் தூள் : 1 மேசைக்கரண்டி( காரத்திற்கேற்ப)
  11. ஜீரக தூள் : 1 தேக்கரண்டி
  12. மஞ்சள் தூள் : 1/2 தேக்கரண்டி
  13. கரம் மசாலா : 1 தேக்கரண்டி
  14. எண்ணெய் : 4 மேசைக்கரண்டி
  15. உப்பு : தேவையான அளவு
  16. கறி வேக வைக்க:::::
  17. மட்டன் கீமா : 250 கிராம்
  18. இஞ்சி பூண்டு விழுது : 1 தேக்கரண்டி
  19. மஞ்சள் தூள் : 1/4 தேக்கரண்டி
  20. உப்பு : 1 தேக்கரண்டி அளவு
  21. முட்டை : 2 (லாப்பை மேல் தடவ)

Instructions

  1. மட்டன் வேக வைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு ப்ரெஷர் குக்கரில் சேர்த்து கறி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி 6-7 விசில்களுக்கு வேக விடவும்...
  2. கோதுமை மற்றும் மைதா மாவில் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்... உங்கள் விருப்பம் போல முழுவதும் கோதுமை மாவிலோ அல்லது முழுவதும் மைதா மாவிலோ கூட செய்யலாம்..
  3. ஸ்டஃபிங்:::::::
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்...
  5. வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்..
  6. பிறகு தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும்...
  7. பிறகு கேரட் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து நன்கு கிளறி அனைத்து மசாலாக்களையும் சேர்க்கவும்...
  8. நன்றாக கிளறியபின் வேக வைத்த தண்ணீருடன் மட்டன் கீமாவை சேர்க்கவும்...
  9. சிறிது நேரம் நன்றாக கிளறியபின் மூடி போட்டு 6-7 நிமிடம் வேக விடவும்
  10. நன்றாக வெந்து தண்ணீர் வற்றிய பின் இறக்கவும்...
  11. பிசைந்து வைத்த மாவை சப்பாத்திக்கு போடும் அளவுவை விட சற்றே பெரிதாக உருண்டை போட்டு கொள்ளவும்
  12. உருண்டைகளை எண்ணெய் தொட்டு விரித்து கொள்ளவும்
  13. நன்றாக விரித்த பின் அதன் நடுவில் ஸ்டஃபிங்கை வைத்து படத்தில் உள்ளது போல் மடிக்க வேண்டும்
  14. படத்தில் உள்ளது போல மடித்த பிறகு சூடான தவாவில் ஒவ்வொன்றாக போட்டு சிறிது எண்ணெய் விட்டு சுடவும்...
  15. முட்டையை நன்றாக அடித்து வைத்துக்கொண்டு லாப்பை மேல் இரண்டு புறமும் தடவவும்... ஒரு புறம் வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபுறமும் வேக விட்டு எடுக்கவும்...
  16. அவ்வளவு தான் மிகவும் சுவையான லாப்பை தயார்...!!!

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE