Home / Recipes / MIXED FRUIT AGAR CAKE

Photo of MIXED FRUIT AGAR CAKE by Shaima Fathima at BetterButter
777
12
0.0(0)
0

MIXED FRUIT AGAR CAKE

Mar-06-2018
Shaima Fathima
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT MIXED FRUIT AGAR CAKE RECIPE

பல வகையான பழங்கள் , பால் , கடல்பாசி கொண்டு செய்யப்படும் இந்த கேக் டெஸர்ட் ஆக விருந்துகளில் பரிமாறலாம்.

Recipe Tags

  • Dessert
  • Healthy

Ingredients Serving: 10

  1. 1.அகர் அகர் - 20 கிராம்
  2. 2.பால் - 5 கப்
  3. 3.சர்க்கரை- 1 & 1/2 கப்
  4. 4.கன்டென்ஸ்டு பால் -3 மேஜைக்கரண்டி
  5. 5.திராட்சை ஜூஸ் -1/2   கப்
  6. 6.ரோஸ் சிரப் -1/4 கப்
  7. 7. தண்ணீர்- 3 கப்
  8. 8.பழங்கள் -ஸ்ட்ராபெர்ரி,மாம்பழம்,கிவி,திராட்சை.(பாதியாக நறுக்கியது)

Instructions

  1. 1.அகர் அகரை நான்கு பங்காக எடுத்துக்கொள்ளவும்
  2. 2.பழங்களை உங்களுக்கு பிடித்த வடிவில் துண்டுகளாக்கி ஒரு பரந்த லேசான குழி உள்ள பாத்திரத்தில் (கேக் வடிவுக்காக)பரத்தி வைக்கவும்.
  3. 3. ஒரு பங்கு அகர் அகர் எடுத்து 3 கப் தண்ணீரில் போட்டு அடுப்பில் வைத்து அது உருகி கரைந்து வரும்போது 1/2 கப் சர்க்கரை சேர்த்து 3 நிமிடம்  கொதிக்க வைத்து பின் அடுப்பில் இருந்து எடுத்து 3 நிமிடம் ஆறவைத்து அதை பழங்கள் வைத்திருக்கும் பாத்திரத்தில் அதன் மேல் மெதுவாக ஊற்றவும்.
  4. 4.அடுத்து 2 கப் பாலுடன் 1/4 கப் சர்க்கரை ,கன்டென்ஸ்டு பால், அகர் அகர் சேர்த்து  அது நன்றாக கரைந்ததும் கொஞ்சம் ஆற வைத்து முதலில் ஊற்றிய பாத்திரத்தில் அதன் மேற்பரப்பில் மெதுவாக ஊற்றவும்.
  5. 5. 1 கப் பாலுடன் அகர் அகர் ,1/4கப் சர்க்கரை, திராட்சை ஜூஸ்(இதை  அடுப்பிலிருந்து இறக்கிய பின் பாலுடன் கலக்கவும்)சேர்த்து காய்ச்சி 3 நிமிடம் ஆறவிட்டு இரண்டாவதாக ஊற்றிய பால் கலவை லேசாக இறுகியதும் அதன் மேல் ஊற்றவும்.
  6. 6.அடுத்து 2 கப் பாலுடன் ரோஸ் சிரப், 1/2 கப் சர்க்கரை, அகர் அகர் சேர்த்து நன்றாக கரையும் 3 நிமிடம் வரை காய்ச்சி ஆறவிட்டு  அதை திராட்சை ஜூஸ் கலந்த அகர் அகர் லேசாக  இறுகியதும் அதன் மேல் ஊற்றவேண்டும்.
  7. 7.பின்னர் 1/2 மணி நேரம் கழிந்து எல்லாம் இறுகியதும் ஒரு பரந்த  தட்டில்(ட்ரே) தலை கீழாக கவிழ்க்கவும்(லேசாக ஒர் நல்ல கூர்முனை கத்தியை வைத்து பாத்திரத்தின் ஓரத்தில் சுற்றவிட்டு தட்டும்போது இளகி தட்டில் வந்து விடும்)

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE