Home / Recipes / Morkuzhambu

Photo of Morkuzhambu by Adhi Venkat at BetterButter
504
6
0.0(0)
0

Morkuzhambu

Mar-06-2018
Adhi Venkat
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Morkuzhambu RECIPE

மோரில் செய்யப்படும் குழம்பு

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu

Ingredients Serving: 4

  1. தயிர் - 2கப் (திக்காக)
  2. துவரம்பருப்பு - 1 தேக்கரண்டி
  3. வரமிளகாய் (அ) பச்சை மிளகாய் - 3
  4. தனியா - 1 தேக்கரண்டி
  5. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  6. தேங்காய்த்துருவல் - சிறிதளவு
  7. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
  8. உப்பு - தேவையான அளவு
  9. எண்ணெய் - தாளிக்க
  10. கடுகு - 1/2 தேக்கரண்டி
  11. கறிவேப்பிலை - சிறிதளவு
  12. பெருங்காயம் - சிறிதளவு

Instructions

  1. தயிரை மத்தால் கடைந்து மோராக்கிக் கொள்ளவும்.
  2. துவரம்பருப்பு, தனியா, சீரகம், வரமிளகாய் இவற்றை பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
  3. ஊறியதும் தண்ணீரை வடித்து தேங்காய் சேர்த்து மையாக அரைக்கவும்.
  4. அரைத்த விழுதை மோரில் கலக்கவும்.
  5. உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பில் நிதானமானத் தீயில் வைக்கவும்.
  6. அவ்வப்போது கலக்கி விடவும்.
  7. கொதி வரும் சமயம் இறக்கி விடவும்.
  8. கடாயில் எண்ணெய் வைத்து கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து குழம்பில் கொட்டவும்.
  9. சுவையான மோர்க்குழம்பு தயார்.
  10. காய்களும் சேர்த்து குழம்பு செய்யலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE