Home / Recipes / Butter Chicken

Photo of Butter Chicken by Banupriya Jawahar at BetterButter
661
3
0.0(0)
0

Butter Chicken

Mar-12-2018
Banupriya Jawahar
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Butter Chicken RECIPE

சப்பாத்தி, நாண், இட்லி,தோசை, பூரிக்கு ஏற்ற சைட் டிஷ்

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. சிக்கன் 1/2 கிலோ
  2. பெல்லாரி 2
  3. தக்காளி 3
  4. பட்டை சிறு துண்டு
  5. கிராம்பு 2
  6. ஏலக்காய் 1
  7. இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி
  8. முந்திரி விழுது 2 தேக்கரண்டி
  9. சீரகத்தூள் 1/2 தேக்கரண்டி
  10. மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி
  11. கரம் மசாலா 1/2 தேக்கரண்டி
  12. கஷ்மீரி சில்லி பொடி 1 தேக்கரண்டி
  13. கசூரி மேத்தி 1 தேக்கரண்டி
  14. தயிர்200 மிலி
  15. பட்டர்50 கிராம்
  16. உப்பு தேவையான அளவு

Instructions

  1. சிக்கனை சுத்தம் செய்யவும்
  2. மேற்சொன்ன எல்லா பொடிகளிலும் 1/2 தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளவும்.
  3. அத்துடன் தயிர், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்க்கவும்.
  4. இந்த கலவையில் சிக்கன் துண்டுகளை புரட்டி 1 மணி நேரம் ஊற வைக்கவும்
  5. பின் சிக்கனை ஒரு விசில் கால அளவிற்கு வேக வைக்கவும்.
  6. வெங்காயத்தை விழுதாக அரைக்கவும்
  7. தக்காளியை கொதி நீரில் போட்டு, தோல் உரித்து விழுதாக அரைக்கவும்
  8. ஒரு கடாயில் பட்டரை சேர்க்கவும்
  9. பட்டை கிராம்பூ ஏலம் போட்டு தாளிக்கவும்
  10. வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுதை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்்
  11. பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  12. மீதமுள்ள அனைத்து பொடிகளையும் சேர்க்கவும்
  13. முந்திரி விழுது சேர்க்கவும்
  14. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  15. இடையிடையே மீதமுள்ள பட்டரையும் சேர்த்து மசாலா பச்சை வாசனை போகும் வரை வேக விடவும்
  16. மசாலாவில் பட்டர் பிரிந்து வரும் சமயம் வேக வைத்த சிக்கனை சேர்த்து புரட்டவும்.
  17. கசூரி மேத்தி தூவி பரிமாறவும்
  18. விருப்பப்பட்டால் ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கலாம்
  19. ருசியான பட்டர் சிக்கன் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE