Home / Recipes / Ragi royal falooda

Photo of Ragi royal falooda by Subashini Krish at BetterButter
358
4
0.0(0)
0

Ragi royal falooda

Mar-27-2018
Subashini Krish
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ragi royal falooda RECIPE

பலூடா குழந்தைகள் மிகவும் விரும்பும் உணவாகும். இதை சற்றே ஆரோக்கியமான முறையில் செய்திருக்கிறேன். பரிட்சை சமயத்தில் புத்துணர்ச்சி அளிக்கும்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. ராகி சேவை 1 கப்
  2. வாழைப்பழம் 1
  3. பப்பாளி பழம் 100 கிராம்
  4. தர்பூசணி 100 கிராம்
  5. தேன் 1 மேஜைக்கரண்டி
  6. முந்திரி 10
  7. உலர் திராட்சை 10
  8. பேரீட்சை 5
  9. பசும்பால் 1 கப்
  10. புளிப்பில்லாத கெட்டி தயிர் 1 கப்
  11. நாட்டு சர்க்கரை 1/2 கப்
  12. சப்ஜா விதை 1 மேஜைக்கரண்டி

Instructions

  1. ராகி சேவையை உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.பசும்பாலில் ஊறவைக்கவும்.
  2. பப்பாளி, வாழைப்பழத்தை வெட்டி தேன் கலந்து வைக்கவும்.
  3. தர்பூசணியை துண்டுகளாக்கிக் கொள்ளவும்
  4. குளிர்ந்த தயிரில் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும் (ஐஸ்கிரீமுக்கு மாற்றாக)
  5. சப்ஜா விதைகளை 1/4 கப் தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும்
  6. முந்திரி, திராட்சை,பேரீட்சை பழங்களை பொடியாக நறுக்கி கலந்து கொள்ளவும்.
  7. ஒரு உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் வாழை, பப்பாளி கலவை இடவும்.
  8. பாலில் ஊற வைத்த ராகி சேவை 1 மேஜைக்கரண்டி சேர்க்கவும்.
  9. நாட்டு சர்க்கரை தயிர் கலவை 1 மேஜைக்கரண்டி சேர்க்கவும்
  10. தர்பூசணி பழத்துண்டுகளை சேர்க்கவும்
  11. மீண்டும் பாலுடன் கூடிய ராகி சேவையை சேர்க்கவும்.
  12. ஊறிய சப்ஜா விதைகளை சேர்க்கவும்
  13. மீண்டும் தயிர் கலவை சேர்க்கவும்
  14. கலந்த உலர் பழங்கள் தூவி அலங்கரித்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE