Home / Recipes / Cucumber Rava Dosai

Photo of Cucumber Rava Dosai by Sowmya Sundar at BetterButter
430
4
0.0(0)
0

Cucumber Rava Dosai

Apr-02-2018
Sowmya Sundar
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cucumber Rava Dosai RECIPE

காலை நேரத்தில் செய்ய சுவையான மற்றும் ஆரோக்கியமான தோசை இது.கைவசம் தோசை மாவு இல்லாத நேரத்தில் உடனடியாக இந்த தோசையை செய்து விடலாம்.வெள்ளரிக்காய் சாலட் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இந்த தோசையை விரும்பி சாப்பிடுவார்கள் .

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Karnataka
  • Pan fry
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. வெள்ளரிக்காய் -1 பெரியது
  2. ரவை -1 கப்
  3. அரிசி மாவு-1 கப்
  4. தயிர்- 3/4 கப்
  5. பச்சை மிளகாய்-2
  6. மிளகு -1 டீஸ்பூன்
  7. சீரகம்-1 டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. மல்லி தழை சிறிது
  10. எண்ணெய் -தோசைக்கு தேவையான அளவு

Instructions

  1. வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாய் மற்றும் தயிர் சேர்த்து வெள்ளரிக்காயை தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
  2. பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு ரவை,அரிசி மாவு மற்றும் உப்பு ,சீரகம் ,மிளகு ,மல்லி தழை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளவும்
  3. ஒரு 15 நிமிடம் வரை மாவை ஊற வைக்கவும்
  4. தோசை கல்லில் எண்ணெய் தடவி காய்ந்ததும் மெலிதாக வார்த்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக ஆனதும் எடுக்கவும்.
  5. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE