Home / Recipes / Ballon vine dosa

Photo of Ballon vine dosa by Adaikkammai Annamalai at BetterButter
370
8
0.0(0)
0

Ballon vine dosa

Apr-06-2018
Adaikkammai Annamalai
480 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ballon vine dosa RECIPE

முடக்கத்தான் தோசை, மூட்டு வலிக்கு மிகவும் நல்லது. மேலும் எண்ணற்ற சத்துக்கள் இருக்கும் இந்த முடக்கத்தான் கீரை தோசை செய்யும் முறையை பாப்போம். மிகவும் எளிமையான பொருட்களைக் கொண்டு இந்த தோசையை செய்து விடலாம். மாவை புளிக்க வைப்பதால், அரவும் கசப்பு இருக்காது. பச்சை வாசனை வராமல் இருக்கும், இருந்தாலும் மிகவும் குறைவாகத் தான் இருக்கும். பூண்டு மிளகாய் பொடி  தொட்டு சாப்பிட்டால் அதுவும் தெரியாது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Blending
  • Steaming
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. இட்லி அரிசி - 2 கப்
  2. பச்சரிசி - 2 கப்
  3. உளுந்து - 1/2 கப்
  4. முடக்கத்தான் கீரை - 3 கப்
  5. வெந்தயம் - 1 தேக்கரண்டி
  6. உப்பு - தேவைக்கேற்ப

Instructions

  1. இட்லி அரிசி, வெந்தயம், பச்சரிசி, உளுந்து அனைத்தையும் 3 மணிநேரம் ஊறவைக்கவும். முடக்கத்தான் கீரையை காம்பிலிருந்து ஆய்ந்து, சுத்தம் செய்யவும்.
  2. தண்ணீரை வடித்து, மிக்சியில் கீரையை சேர்க்கவும்.
  3. உப்பு, ஊறவைத்த அரிசி, வெந்தயம் சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும். அரைக்கும் பொழுது தண்ணீர் சிறிது சேர்த்துக்கொள்ளவும்.
  4. 8 மணிநேரம் வரை புளிக்க வைக்கவும்.
  5. தோசை ஊற்றும் முன், நன்கு மாவை ஊற்றும் பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும். சூடான தோசைக்கல்லில் ஊற்றி மூடி வேக விடவும். விருப்பப்பட்டால் திருப்பி போட்டு சுடலாம். ஒரு சில சொட்டு நல்லெண்ணெய் ஊற்றி வேகவிடவும்.
  6. சுவையான சத்தான தோசை தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE