Home / Recipes / MultimilletRava Mango Kesari

Photo of MultimilletRava Mango Kesari by Ayesha Ziana at BetterButter
341
3
0.0(0)
0

MultimilletRava Mango Kesari

Apr-26-2018
Ayesha Ziana
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT MultimilletRava Mango Kesari RECIPE

சிறுதானியங்களை ரவையாக்கி அதனுடன் மாம்பழம் சேர்த்து செய்த ருசியான சத்தான கேசரி.

Recipe Tags

  • Medium
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 6

  1. சாமை, திணை,வரகு,குதிரைவாலி, சோளம் தலா 1/2 கப்
  2. மாம்பழம் 1.5
  3. சீனி 1 கப்
  4. சூடான நீர் 1 3/4 கப்
  5. ஏலக்காய் 3
  6. முந்திரி 15
  7. நெய் 3 டேபிள் ஸ்பூன்

Instructions

  1. சிறுதானியங்களைத் தனித்தனியாக வறுக்கவும். பின், மிக்ஸியில் முதலில் சோளம் சேர்த்து 2 நொடி அரைத்து, பின் மற்றவற்றையும் சேர்த்து ரவை பதம் வரும் வரை விட்டு விட்டு அரைக்கவும். சிறுதானிய ரவை தயார். இந்த ரவையைப் பல ரெசிபிகளுக்கும் பயன்படுத்தலாம்.
  2. முதலில் மாம்பழத்தை வெட்டி கையால் நன்றாக மசிக்கவும். பழம் 1 1/4 கப் கிடைக்கும்.
  3. ஒரு நான்ஸ்டிக் பேனில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரியைப் பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும்.
  4. பின்னர், அதே கடாயில் ரவையை சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.
  5. பின்னர் சூடான நீர் சேர்த்து கை விடாமல் கிளறவும். ரவையில் கட்டி இருக்கக்கூடாது.
  6. அதன் பின் சீனியும் சேர்த்து விடாமல் கிளறவும்.
  7. சில நிமிடங்கள் கழித்து மசித்த மாம்பழங்களும் சேர்த்து, இடையிடையே மீதமுள்ள நெய்யும் சேர்த்து விடாமல் கிளறவும்.
  8. தட்டிய ஏலக்காய் சேர்க்கவும்.
  9. பின்னர் 7-10 நிமிடங்கள், அல்லது கலவை ஒட்டாமல் வரும் வரை, இடையிடையே கிளறி நன்றாக வேக விடவும்.
  10. அடுப்பை அணைத்து, நெய் தடவிய தட்டில் கொட்டி, முந்திரி தூவி அலங்கரிக்கவும்.
  11. கலவை ஆறி கெட்டியானதும் கவனமாக துண்டுகள் போடவும்.
  12. சத்தான சுவையான சிறுதானியரவை கேசரி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE