Home / Recipes / Baklava

Photo of Baklava by khadheeja irfana at BetterButter
417
5
0.0(0)
0

Baklava

Apr-27-2018
khadheeja irfana
60 minutes
Prep Time
45 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Baklava RECIPE

துருக்கி நாட்டின் பராம்பரிய பிரபலமான இனிப்பு பதார்த்தம்.

Recipe Tags

  • Veg
  • Hard
  • Eid
  • Middle Eastern
  • Baking
  • Dessert
  • High Fibre

Ingredients Serving: 10

  1. அக்ரோட் பருப்பு 125 கிராம்
  2. பாதம் பருப்பு 125 கிராம்
  3. பிஸ்தா பருப்பு 125 கிராம்
  4. பிஸ்தா பருப்பு அரைத்தது ஒரு மேசைக்கரண்டி அலங்காரத்திற்காக
  5. பட்டை தூள் ஒரு தேக்கரண்டி
  6. சர்க்கரை கால் கப்
  7. பிலோ பேஸ்ட்ரி ஷீட் 25
  8. வெண்ணை உருக்கியது 250 கிராம் பேஸ்ட்ரி ஷீட்டில் தடவுவதற்கு
  9. பேக்கிங் ட்ரே
  10. சர்க்கரை பாகு செய்வதற்கு
  11. தண்ணீர் நான்கு கப்
  12. சர்க்கரை 2 கப்
  13. எலுமிச்சை சாறு 2 மேஜைக்கரண்டி
  14. தேன் கால் கப்
  15. பன்னீர் 4 மேஜைக்கரண்டி

Instructions

  1. மேலே சொன்ன அனைத்து பருப்பு வகைகளையும் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  2. அதோடு பட்டைத்தூள்,சர்க்கரை சேர்த்து தனியாக ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. சர்க்கரை பாகு செய்ய ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சர்க்கரை சேர்த்து கொதிக்கவைத்து பின்னர் எலுமிச்சை சாறு பன்னீர் சேர்த்து கலந்து அதன்பின் தேன் சேர்த்து மிதமான தீயில் 20 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  4. பிலோ பேஸ்ட்ரி ஷீட் பற்றி ஒரு சிறு குறிப்பு: மென்மையான டிஷ்யூ பேப்பர் போன்று இருக்கும் கவனமாக கையாளவும்.
  5. ஒரு பேக்கிங் ட்ரெயை வெண்ணைதடவி வைத்துக் கொள்ளவும்.
  6. முதலில் ஒரு ஷீட்டை எடுத்து பேக்கிங் டிரேயில் வைக்கவும் அதன்மேல் உருக்கிய வெண்ணையை தடவவும்.
  7. இதுபோல் பத்து ஷீட்டை ஒன்றன் மேல் ஒன்றாக வெண்ணையை தடவி வைக்கவும். ஒவ்வொரு ஷீட்டுக்கும் வெண்ணை தடவ மறக்க வேண்டாம்.
  8. 10 ஷீட் வெண்ணை தடவி வைத்ததும் அரைத்து வைத்த பருப்பு சர்க்கரை பட்டைத்தூள் சேர்ந்த கலவையில் பாதியை அதன் மேல் பரத்தவும்.
  9. மீண்டும் 5 பிலோ பேஸ்ட்ரி ஷீட்டை ஒவ்வொன்றுக்கும் இடையில் வெண்ணை தடவி அடுக்கடுக்காக வைக்கவும்.
  10. மீதமுள்ள பருப்பு கலவையை அதன்மேல் பரத்தவும்.
  11. மீண்டும் 10 பிலோ பேஸ்ட்ரி ஷீட்டை ஒவ்வொன்றுக்கும் இடையில் வெண்ணை தடவி அடுக்கடுக்காக வைக்கவும்.
  12. பேஸ்ட்ரி ஷீட் ட்ரேயை விட பெருசாக இருந்தால் ட்ரே அளவிற்கு அதனை வெட்டி சரிபடுத்தி நேர்த்தியாக வைத்துக் கொள்ளவும்.
  13. சதுர வடிவிலோ அல்லது நீங்கள் விரும்பிய வடிவிலோ அதனை வெட்டி ப்ரீ ஹிட் செய்த ஓவனில் 200c 400f or gas mark 6 வைத்து 30ல் இருந்து 40 நிமிடம் வைக்கவும்.
  14. நன்றாக பேக் ஆனவுடன் வெளியில் எடுத்து அதன்மேல் சர்க்கரைப் பாகை எல்லா இடத்திலும் பரவலாக படும்படி மெதுவாக ஊற்றவும்.
  15. அதன்மேல் அலங்காரத்திற்காக அரைத்து வைத்த பிஸ்தா தூளை தூவவும். இதனை 4ல் இருந்து 5 மணி நேரம் அப்படியே வைத்து விடவும்.
  16. சர்க்கரைப்பாகில் நன்கு ஊறி பக்லவா பரிமாற தயாராக உள்ளது. துண்டுகளாக வெட்டி குடும்பத்தோடும் நண்பர்களோடும் சந்தோஷமாக பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE