Home / Recipes / Znoud al seit

Photo of Znoud al seit by Raihanathus Sahdhiyya at BetterButter
261
4
0.0(0)
0

Znoud al seit

Apr-28-2018
Raihanathus Sahdhiyya
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Eid
  • Middle Eastern
  • Boiling
  • Chilling
  • Frying
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 10

  1. சமுசா பட்டிஸ் அல்லது ஃபிலோ பேஸ்ட்ரி - 20 ஷீட்ஸ்
  2. அஷ்தா க்ரீம் - 1/2 கப்
  3. சர்க்கரை 1 கப்
  4. தண்ணீர் 1/2 கப்
  5. பிஸ்தா பருப்பு (பொடித்தது) 1/4 கப்
  6. எண்ணெய் - பொரிக்க
  7. கார்ன் ஃப்ளார் 2தேக்கரண்டி
  8. ரோஸ் எசன்ஸ் 1 ஸ்பூன்

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். மெல்லிய கம்பி பதம் வந்தவுடன் ஒரு ஸ்பூன் ரோஸ் எசன்ஸ் சேர்த்து இறக்கவும். இந்த பாகை ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்
  2. இரண்டு சமூசா ஷீட்ஸ் எடுத்து பிளஸ் (+) சிம்பலில் வைக்கவும். மேலே உள்ள ஷீட் மிது இரு ஸ்பூன் அஷ்தா க்ரீம் வைத்து அந்த ஷீட்டை மட்டும் இரு புறமும் மடிக்கவும்.
  3. பின்னர் அடி புறம் உள்ள ஷீட்டை மிகவும் கவனத்துடன் சுருட்ட வேண்டும். இறுதியாக தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துள்ள கார்ன் மாவை தொட்டு ஓரத்தை நன்றாக ஒட்ட வேண்டும். இவ்வாறு இரண்டு ஷீட் வைத்து செய்வதால் க்ரீம் வெளியே வருவதற்கு வாய்ப்பு இல்லை
  4. இவ்வாறு அனைத்து ஷீட்களையும் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்த ரோல்களை போட்டு கருகி விடாமல் கவனமாக பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்
  6. பரிமாறும் தட்டில் விருப்பம் போல் பொறித்து வைத்த ரோல்களை அடுக்கி அவற்றின் மீது சர்க்கரை பாகை ஊற்ற வேண்டும். பிறகு பொடித்து வைத்துள்ள பிஸ்தாவை மேலே தூவி பரிமாறவும்.
  7. அஷ்தா க்ரீம் செய்யும் முறை: 1/2 லி பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும். அதில் 1/2 லெமன் ஜூஸ் பிழிந்து திரிய வைக்கவும். அதை துணியில் வடித்து (சென்னா) பனீரை மட்டும் எடுத்து கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 1 கப் பால் ஊற்றி அத்துடன் 2 ஸ்பூன் கார்ன் மாவு மற்றும் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கிளறவும். அதில் செய்து வைத்த சென்னாவையும் சேர்த்து நன்றாக கிளறவும். திக்காக கிரீம் போல வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். இதை ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிஜ்ஜில் வைத்து கொள்ளலாம். தேவைப்படும் நேரத்தில் எடுத்து பயன் படுத்தி கொள்ளலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE