Home / Recipes / Motichoor ladoo

Photo of Motichoor ladoo by Raihanathus Sahdhiyya at BetterButter
215
3
0.0(0)
0

Motichoor ladoo

May-01-2018
Raihanathus Sahdhiyya
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Indian
  • Whisking
  • Blending
  • Chilling
  • Frying
  • Dessert

Ingredients Serving: 6

  1. கடலை மாவு 1/2 கப்
  2. தண்ணீர் 1/2 கப்
  3. பால் 3-4 மேசைக்கரண்டி
  4. கேசரி கலர் 1/8 தேக்கரண்டி
  5. சர்க்கரை 1/4 கப்
  6. எண்ணெய் / நெய் - பொறிக்க
  7. ரோஸ் எசன்ஸ் 1/4 தேக்கரண்டி
  8. லெமன் ஜூஸ் 1/4 தேக்கரண்டி
  9. ஏலக்காய் தூள் 1/4 தேக்கரண்டி
  10. துருவிய பாதாம் - அலங்கரிக்க

Instructions

  1. ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, 1 தேக்கரண்டி நெய், கேசரி பவுடர், பால் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக மாவு போல் கரைத்து கொள்ள வேண்டும். மாவு மிகவும் கெட்டியாகவும் இல்லாமல் மிகவும் நீர்த்தும் இல்லாமல் நடுத்தரமாக இருக்க வேண்டும்.
  2. இப்பொழுது, கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு வடி தட்டை கொண்டு கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றவும். பின்னர் வடி தட்டை இலேசாக தட்டவும். இப்பொழுது சிறு சிறு பூந்திகளாக எண்ணெயில் பொறியும். நுரைகள் அடங்கி பூந்திகள் வெந்ததும் அவற்றை எடுக்க வேண்டும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.
  3. பிறகு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். 6-7 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து அதில் ஏலக்காய் தூள்,ரோஸ் எசன்ஸ், லெமன் ஜூஸ் ஆகியவற்றை சேர்த்து பின்னர் அடுப்பிலிருந்து இறக்கவும்.
  4. பொறித்து வைத்துள்ள பூந்திகளை மிக்ஸியில் போட்டு ஒரு முறை இலேசாக சுற்றவும்.
  5. இப்பொழுது பொடித்த பூந்தியில் சர்க்கரை பாகை ஊற்றி நன்றாக கிளறவும். இக்கலவையை 1/2 மணி நேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும். பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதன் மீது துருவிய பாதாம் தூவி அலங்கரிக்கவும். சுவையான மோதிசூர் லட்டு தயார்..

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE