Home / Recipes / Thirunelveli halwa

Photo of Thirunelveli halwa by Raihanathus Sahdhiyya at BetterButter
334
3
0.0(0)
0

Thirunelveli halwa

May-06-2018
Raihanathus Sahdhiyya
630 minutes
Prep Time
45 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Boiling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 10

  1. உடைத்த சம்பா கோதுமை- 1 கப்
  2. சர்க்கரை - 2 1/2 கப் + 1/2 கப்
  3. தண்ணீர் - 4 கப் + 1 கப்
  4. நெய் - 1 கப்
  5. முந்திரி, பாதாம் - கையளவு

Instructions

  1. முதலில் உடைத்த சம்பா கோதுமையை தண்ணீர் ஊற்றி 8 ம‌ணி நேர‌ம் ஊற வைக்கவும். பின்னர் அவற்றை கையில் நன்றாக பிசைந்து விட்டு வடிகட்டி பாலை எடுக்கவும். பின்னர் மீண்டும் இரு முறை இவ்வாறு பால் எடுக்கவும்.
  2. இந்த பாலை 2-3 மணி நேரம் வரை அப்படியே விட்டு வைக்க வேண்டும். தண்ணீர் மேலே வந்துவிடும். அவற்றை கீழே ஊற்றி விட்டு அடியில் தங்கிய பாலை மட்டும் எடுத்து அத்துடன் 4 கப் தண்ணீர் சேர்த்து வைத்து கொள்ளவும்
  3. ஒரு பெரிய வாணலியை அடுப்பில் வைத்து அதில் 2 1/2 கப் சர்க்கரை சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி வைக்கவும்
  4. அதே நேரம், இன்னொரு சிறிய பாத்திரத்தில் 1/2 கப் சர்க்கரை சேர்த்து 2 மேசைக்கரண்டி தண்ணீர் மட்டுமே ஊற்றி காரமலைஸ் செய்யவும். பொன் நிறமாக வந்தவுடனே இந்த காரமலை வாணலியில் வைத்துள்ள சர்க்கரை பாகில் ஊற்றி சிறு கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும்
  5. பதம் வந்தவுடன் கோதுமை பாலை சர்க்கரை பாகில் ஊற்றி கலக்கவும். சிறிது நேரத்தில் (10-15 நிமிடம்) கொஞ்சம் திக்காக ஆரம்பிக்கும். அப்போது எடுத்து வைத்துள்ள நெய்யில் 1 மேசைக்கரண்டி மட்டும் சேர்த்து கிண்ட வேண்டும். இவ்வாறே சிறு சிறு இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறி விட்டு கொண்டே இருக்க வேண்டும்.
  6. கிட்டத்தட்ட 45-50 நிமிடம் ஆன பிறகு ஊற்றிய நெய் வெளியே கொப்பளிக்கும். அல்வா நன்றாக சேர்ந்து வரும்.
  7. இப்பொழுது முந்திரியை நெய்யில் வறுத்து அல்வாவில் சேர்த்து கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும். (நான் முந்திரி, பாதாமை அரைத்து பால் சேர்த்துள்ளேன்)
  8. வாயில் போட்டால் வழுக்கி கொண்டு போகும், பாரம்பரிய திருநெல்வேலி அல்வா சுடச் சுட தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE