Home / Recipes / Mixed Fruit - Bread Lasagna

Photo of Mixed Fruit - Bread Lasagna by Ayesha Ziana at BetterButter
814
3
0.0(0)
0

Mixed Fruit - Bread Lasagna

May-08-2018
Ayesha Ziana
30 minutes
Prep Time
40 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mixed Fruit - Bread Lasagna RECIPE

இத்தாலிய லசான்யா ரெசிபியில் பழங்கள், பிரட் வைத்து சற்று வித்தியாசமாக முயன்றது. ரொம்பவே சுவையானது. டின்னர் பார்ட்டிகளுக்கு ஏற்றது.

Recipe Tags

  • Medium
  • Dinner Party
  • Italian
  • Baking
  • Dessert

Ingredients Serving: 5

  1. கோதுமை பிரட் 5 முதல் 6 ஸ்லைஸ்
  2. ஆப்பிள், மாம்பழம், ஆரஞ்சு தலா ஒன்று
  3. சீனி 1/4 + 1/8 கப்
  4. பிரட் தூள் 1 கப்
  5. உப்பு ஒரு பின்ச்
  6. உப்பில்லாத வெண்ணெய் தேவைக்கு
  7. பட்டை தூள்
  8. பொடித்த பாதாம் மேலே தூவ

Instructions

  1. ஆரஞ்சு பழத்துடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து ஜூசரில் அரைத்து, வடிகட்டிய ஜூஸை எடுத்துக் கொள்ளவும். ஆரஞ்சு பழத்தின் தோலை துருவிக்கொள்ளவும்.
  2. தவாவில் வெண்ணெய் சேர்த்து பிரட் துண்டுகளை டோஸ்ட் செய்து கொள்ளவும்.
  3. ஒரு பவுலில் பொடியாக நறுக்கிய ஆப்பிள் மற்றும் மாம்பழம், பாதி பிரட் தூள், 1/4 கப் சீனி, துருவிய ஆரஞ்சு தோல், ஆரஞ்சு ஜூஸ் எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  4. மற்றொரு பவுலில் மீதமுள்ள பிரட் தூள், சீனி, பட்டை தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  5. அஸ்ஸெம்ப்லிங் செய்ய: வெண்ணெய் தடவிய பேக்கிங் டின்னில், டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளைத் தேவைக்கேற்ப சிறு துண்டுகளாக்கி, நெருக்கமாக அடுக்கவும். அதன் மேல் பழக்கலவையில் பாதியை பரப்பவும். அதன் மேல் மீண்டும் ஒரு முறை டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளை அடுக்கவும். மீண்டும் பழக்கலவை சேர்க்கவும். அதன் மேல் பிரட் தூள் கலவையை பரப்பி, ஒரு கப்பின் அடிப்பாகத்தால் நன்கு அழுத்தவும். இறுதியாக மேலே பொடித்த பாதாமை தூவவும்..
  6. பேக்கிங் டின்னை 10 நிமிடங்கள் முற்சூடு செய்த பிரஷர் குக்கர் அல்லது அவனில் வைத்து 30 முதல் 40 நிமிடங்கள் பேக் செய்யவும்.
  7. ஆறியதும் தேவைப்பட்டால் பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, பின்னர் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.
  8. சூப்பர் சுவையில் ப்ரூட்-பிரட் லசான்யா தயார். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் பிடிக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE