Home / Recipes / Honey lemon chicken fry

Photo of Honey lemon chicken fry by Nancy Samson at BetterButter
538
4
0.0(0)
0

Honey lemon chicken fry

May-10-2018
Nancy Samson
60 minutes
Prep Time
40 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Honey lemon chicken fry RECIPE

இந்த சமையல் முறை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக நான் கற்றுக்கொண்டது. இதை வீட்டில் செய்து பார்த்து நமது செயலி மூலமாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இனிப்பு புளிப்பு காரம் கலந்த கோழி இறைச்சி சுவை பிரமாதம். சமைத்து ருசித்து மகிழுங்கள்.

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Dinner Party
  • Chinese
  • Microwaving
  • Appetizers
  • Low Carbs

Ingredients Serving: 4

  1. கோழியின் தொடை கறி (எலும்பு இல்லாதது) - 5 அல்லது 6 பெரிய துண்டுகள்
  2. பூண்டு பற்கள் - 5(துருவிக்கொள்ளவும்)
  3. தேன் - 1 மேசைக்கரண்டி
  4. சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி
  5. எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி
  6. மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
  7. உப்பு - தேவையான அளவு
  8. சமையல் எண்ணெய் - 100 மி.லி
  9. கொத்தமல்லி தழை (சிறிதாக நறுக்கியது)

Instructions

  1. 1. ஒரு பாத்திரத்தில் தேன், மிளகாய் தூள், சோயா சாஸ், துருவிய பூண்டு பற்கள், தேவையானன அளவு உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.
  2. 2. இந்த மசாலா கலவையில் சுத்தம் செய்த கோழி இறைச்சி துண்டுகளை நன்கு பிரட்டி, அனைத்து இடங்களிலும் படுமாறு கலந்து, ஒரு மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் மூடி போட்டு ஊற வைக்கவும்.
  3. 3. ஒரு மணிநேரம் கழித்து , ஊறவைத்த கோழி இறைச்சியை ஒரு நுண்ணலை தாங்கும் தட்டில் எண்ணெய் தடவி வரிசையில் அடுக்கவும். மீதமுள்ள மசாலா கலவையை இறைச்சியில் மீது ஊற்றவும்.
  4. 4. இறைச்சியின் மேல் அனைத்து பக்கமும் படுமாறு சிறிது எண்ணெய் தெளிக்கவும்.
  5. 5. மேற்கூறிய தட்டினை நுண்ணலை அடுப்பில் (மைக்ரோவேவ அவன்) 220°சி அளவில் 40 நிமிடங்கள் பேக் செய்யவும்.
  6. 6. இடையிடையே நுண்ணலை அடுப்பில் இருந்து வெளியே எடுத்து இறைச்சியை திருப்பிவிட்டு மீண்டும் பேக் செய்யவும்.
  7. 7. இறைச்சி நன்கு வெந்தவுடன் நுண்ணலை அடுப்பை அணைத்து விட்டு, இறைச்சியில் மேல் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
  8. (நுண்ணலை அடுப்பு இல்லாதவர்கள், காஸ் அடுப்பில் ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி வறுத்து எடுக்கவும். பொறிக்கக்கூடாது வறுக்க வேண்டும்.)

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE