Home / Recipes / Mutton platter

Photo of Mutton platter by Priyadharshini Selvam at BetterButter
699
2
0.0(0)
0

Mutton platter

May-21-2018
Priyadharshini Selvam
30 minutes
Prep Time
60 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg

Ingredients Serving: 4

  1. கறி ரசம் செய்ய :
  2. ஆட்டுக்கறி வேகவைத்த தண்ணீர் - 3கப்
  3. புளி - எலுமிச்சை அளவு
  4. தக்காளி - 2
  5. உப்பு - தேவையான அளவு
  6. மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
  7. அரைத்துக் கொள்ள:
  8. மிளகு - 3 தேக்கரண்டி
  9. சீரகம் - 2 தேக்கரண்டி
  10. பச்சை மிளகாய் - 2
  11. மல்லி இலை - சிறிது
  12. கறிவேப்பிலை - சிறிது
  13. பூண்டு - 8 அல்லது 10 பல்
  14. தாளிக்க:
  15. கடுகு - ஒரு தேக்கரண்டி
  16. வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
  17. பெருங்காயம் - கால் தேக்கரண்டி
  18. கறிவேப்பிலை - சிறிது
  19. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  20. கைமா உருண்டை :
  21.   மட்டன் கைமா - 500 கிராம்
  22. பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
  23. துருவிய தேங்காய் - 3/4 கப்
  24. பச்சை மிளகாய் - 7 (நறுக்கியது)
  25. பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
  26. கசகசா - 2 டீஸ்பூன்
  27. சோம்பு - 1 டீஸ்பூன்
  28. பட்டை - 1 இன்ச்
  29. இஞ்சி - சிறிய துண்டு (நறுக்கியது)
  30. பூண்டு - 10 பற்கள் (நறுக்கியது)
  31. மஞ்சள் தூள் - தேவையான அளவு
  32. உப்பு - தேவையான அளவு
  33. எண்ணெய் - தாளிக்க
  34. கடுகு - 1/4 டீஸ்பூன்
  35. கருவேப்பிலை - சில
  36. மட்டன் வடை :
  37. கைமா உருண்டை கலவை
  38. எண்ணெய் பொரிப்பதற்கு

Instructions

  1. கறி ரசம் செய்ய:
  2. அரைக்க கொடுத்த பொருளை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் புளியை கரைத்து அதில் கறி தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் போட்டு தக்காளியை அதில் பிசைந்து விட்டு போடவும்.
  4. அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளித்து அரைத்த மசாலாவை போட்டு வதக்கி பின் புளித்தண்ணீர் கரைசலை தாளித்த கலவையில் ஊற்றி நுரை கட்டி வரவும் அடுப்பை அணைத்து விடவும்.
  5. கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். இப்பொழுது கறி ரசம் ரெடி.
  6. கைமா உருண்டை :
  7. மிக்ஸியில் தேங்காய், பொட்டுக்கடலை மற்றும் கசகசா சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
  8. அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 15 நிமிடம் நன்கு வதக்கி, பின் இறக்கி குளிர வைக்க வேண்டும்
  9. பிறகு மிக்ஸியில் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  10. பின் ஒரு பாத்திரத்தில் மட்டன் கைமா, தேங்காய் பேஸ்ட் மற்றும் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் உருண்டைகளாக பிடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்
  11. இவற்றை ஆவியில் வேகவைத்து எடுத்து கடுகு கருவேப்பிலை தாளித்து இறக்கினால் கைமா உருண்டை தயார்.
  12. மட்டன் வடை :
  13. மேலே குறிப்பிட்டுள்ள கைமா உருண்டையை வேக வைக்காமல் வடை போல் கையில் தட்டி, எண்ணெயில் பொரித்து எடுத்தால் மட்டன் வடை ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE