வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு காளான் குழம்பு

Photo of Chettinadu Kaalan Curry by Sindhu Murali at BetterButter
1812
33
4.5(0)
0

செட்டிநாடு காளான் குழம்பு

May-18-2016
Sindhu Murali
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காளான் - 250 கிராம்
  2. சின்ன வெங்காயம் - 10 எண்ணிக்கை (சுத்தப்படுத்தப்பட்டு தோல் உரிக்கப்பட்டது)
  3. தக்காளி - 2 (பொடியாக நறுக்கப்பட்டது)
  4. பூண்டு - 5 பற்கள் ( நறுக்கப்பட்டது)
  5. இஞ்சி - 2 துண்டு (நறுக்கப்பட்டது)
  6. கறிவேப்பிலை - கையளவு
  7. பே இலை - 2 எண்ணிக்கை
  8. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  10. உப்பு- சுவைக்கேற்ற அளவு
  11. கொத்துமல்லி - அலங்கரிப்பதற்கு
  12. வெறுமனே வறுப்பதற்கு & அரைப்பதற்கு
  13. துருவப்பட்டத் தேங்காய் - 2 தேக்கரண்டி
  14. கிராம்பு - 2
  15. ஏலக்காய் - 1
  16. மிளகு - 1/2 தேக்கரண்டி
  17. காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3 (பெடிக்கி மிளகாய் பயன்படுத்தினேன்)
  18. கசகசா - 1/2 தேக்கரண்டி
  19. பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி
  20. சீரகம் - 1 தேக்கரண்டி
  21. மல்லி - 1 தேக்கரண்டி
  22. பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கடாயைச் சூடுபடுத்தி வெறுமனே வறுப்பதற்கு & அரைப்பதற்குக் கீழ் பட்டியலிடப்பட்ட அனைத்துப் பொருள்களையும் சேர்க்கவும். வாசனை வரும்வரை வறுத்து மிருதுவான பவுடராக அரைத்துக்கொள்ளவும்.
  2. அதே கடாயில், எண்ணெய் சேர்த்து & சூடுபடுத்தவும். பே இலை, பூண்டு, இஞ்சி & கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும். 2 நிமிடங்கள்ககு வதக்கவும்.
  3. சின்னவெங்காயம் சேர்த்து அவை மிருதுவாகவும் பக்கங்கள் பொன்னிறமாகவும் மாறும்வரை வறுக்கவும். இப்போது காளான் சேர்த்து வறுக்கவும். காளான் தண்ணீர் விடுவதைக் காண்பீர்கள். தண்ணீர் முற்றிலுமாக உலரும் வரை வறுக்கவும். தக்காளியைப் போட்டு மேலும் 5 நிமிடங்கள் வறுக்கவும்.
  4. இந்த சமயத்தில், அரைத்த மசாலா, உப்பு & மஞ்சள் தூள் சேர்க்கவும். இந்தக் கலவை உலர்ந்துவிடும். உங்கள் விருப்பத்திற்கேற்ற பதத்தைப் பெறுவதற்கு தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்களுக்கு குழம்பு கொதிக்கவிடவும்.
  5. இறுதியாக கொத்துமல்லி சேர்த்து புல்கா, சப்பாத்தி அல்லது கல் தோசையுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்