வீடு / சமையல் குறிப்பு / ஒக்கரை/உக்கரை

Photo of Okkarai / Ukkarai by Sandhya Ramakrishnan at BetterButter
4783
24
5.0(0)
0

ஒக்கரை/உக்கரை

May-19-2016
Sandhya Ramakrishnan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கடலை பருப்பு/ – ½ கப்
  2. பைத்தம் பருப்பு/பாசிப்பருப்பு – ½ கப்
  3. வெல்லம்/– 1 கப்
  4. நெய்/– 4 தேக்கரண்டி
  5. முந்திரிபருப்பு – கைப்பிடி அளவு
  6. தேங்காய் – ¼ கப் (துருவப்பட்டது)
  7. ஏலக்காய் தூள் – ¼ தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. இரண்டு பருப்புகளையும் சற்றே பொன்னிறமாகும்வரை எண்ணெய் சேர்க்காமல் வறுக்கவும். பருப்புகள் எளிதிலி கருகிடாமல் இருக்க வானலியைத் தொடர்ந்து நீங்கள் கிண்டுவதை உறுதி செய்துகொள்ளவும்.
  2. வறுத்த பருப்புகளைக் கழுவி குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊறவைக்கவும்.
  3. ஊறவைத்த பருப்புகளை வடிக்கட்டி கரடுமுரடான சாந்தாகக் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். நாம் வேகவைக்கக்கூடிய பாதி கட்டியானச் சாந்தாக அரைக்கும்போது குறைந்த அளவு தண்ணீர் சேர்ப்பதை உறுதி செய்யவும்.
  4. அரைத்த மாவை சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து இட்லி குண்டானில் 12ல் இருந்து 15 நிமிடங்கள் வேகவைக்கவும். வெந்ததும் கலவை இறுதி கெட்டியாகிவிடும்.
  5. கொஞ்சம் ஆறட்டும், அதன்பிறகு மாவை சிறுசிறு துண்டுகளாக உடைத்து ஒரு பிளெண்டரில் போடவும். இரண்டொரு தரம் அடித்து மென்மையானப் பவுடராக அடித்துக்கொள்ளவும்.
  6. இதற்கிடையில், கடாயைச் சூடுபடுத்தி ஒரு தேக்கரண்டி நெய் சேர்க்கவும். பொன்னிறமாகும்வரை முந்திரி பருப்பை வறுக்கவும். ஒரு தட்டில் எடுத்துக்கொள்ளவும். அதே கடாயில், மேலும் 1 தேக்கரண்டி நெய்யை சூடுபடுத்தி தேங்காய் துருவலை பொன்னிறமாகும்வரை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  7. அதே கடாயில் வெல்லம், அது மூழ்கும்படி போதுமானத் தண்ணீர் சேர்க்கவும். கொதி நிலைக்குக் கொண்டுவரவைம், வெல்லம் முழுமையாகக் கரையட்டும். தேவைப்பட்டால் இந்த சமயத்தில் அழுக்கை வடிக்கட்டி, மீண்டும் அடுப்பில் வைக்கவும்.
  8. பாகு கம்பி பதத்திற்கு வரட்டும். பாகை இரண்டு விரல்களால் பிடித்து இழுத்தால் ஒற்றைக் கம்பி போல் வரும். கேண்டி வெப்பமானியையும் பதத்தைச் சரிபார்க்கப் பயன்படுத்தலாம்.
  9. இப்போது அரைத்த பருப்புப் பவுடரை வெல்லத்தில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். உலர்ந்ததாகத் தோன்றும்வரை குறைவானத் தீயில் வேகவைக்கவும்.
  10. இப்போது வறுத்த முந்திரிபருப்பு, தேங்காய், ஏலக்காய் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த சமயத்தில் மீதமுள்ள நெய்யையும் சேர்த்து சிறு தீயில் அவை உலர்ந்து மாவாகும்வரை சமைக்கவும்.
  11. அடுப்பிலிருந்து எடுத்து அறையின் வெப்பத்தில் சூடாகப் பரிமாறவும். பிரிட்ஜில் வைத்து நாங்கள் ஒரு வாரத்திற்கு அனுபவித்தோம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்