வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் மோமோஸ்

Photo of Chicken momos by vani vani at BetterButter
481
1
0.0(0)
0

சிக்கன் மோமோஸ்

Jul-17-2018
vani vani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் மோமோஸ் செய்முறை பற்றி

இந்த சிக்கன் மோமோஸ் கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே ரொம்ப சுலபமாக ஈஸியாகவும் தயாரித்து விடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • சைனீஸ்
  • ஸ்டீமிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் கொத்துக்கறி ஒரு கப்
  2. நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று
  3. மிளகுத்தூள் கால் டீஸ்பூன்
  4. மிளகாய் தூள் அரை டீஸ்பூன்
  5. நறுக்கிய இஞ்சி அரை டீஸ்பூன்
  6. நறுக்கிய பூண்டு அரை டீஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  9. மைதா ஒரு கப்
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் ஒரு டீஸ்பூன்
  12. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் மூன்றையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்
  2. அதில் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  3. இந்த கலவையை 20 நிமிடம் அப்படியே ஊற வைக்கவும்
  4. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், கோழி கொத்துக்கறி, மிளகு தூள், மல்லித்தூள், நறுக்கிய இஞ்சி பூண்டு, உப்பு & எண்ணெய் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக் கொள்ளவும்
  5. பிசைந்த மாவில் ஒரு சிறிய உருண்டையை எடுத்து வட்ட வடிவில் மெல்லியதாக தேய்த்துக் கொள்ளவும்
  6. வட்ட வடிவம் சரியாக வரவில்லை என்றால் ஒரு மூடியை வைத்து வட்ட வடிவில் வெட்டி கொள்ளவும்
  7. அந்த வட்ட வடிவத்தில் நடுவே ஒரு ஸ்பூன் சிக்கன் கலவையை வைக்கவும்
  8. சுத்தியுள்ள மாவை சிறிது சிறிதாக மடித்து மோமோஸ் வடிவம் கொண்டு வரவும்
  9. ஆவி வரும் இட்லி பாத்திரத்தில் மோமோஸ் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்
  10. சாஸுடன் சூடாகப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்