Photo of Chickpea tamarind gravy by Rachell Revathi Samuel at BetterButter
284
2
0.0(1)
0

Chickpea tamarind gravy

Aug-02-2018
Rachell Revathi Samuel
495 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுண்டக்கடலை 1 கப்
  2. கத்திரிக்காய் 2
  3. முருங்கைக்காய் 1
  4. புளிக்கரைசல் 1/4 கப்
  5. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  6. குழம்பு மல்லித்தூள் 2 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. அரைக்க:
  9. தேங்காய் 1/4 கப்
  10. பெரிய வெங்காயம் 2
  11. தக்காளி 2
  12. கருவேப்பிலை சிறிது
  13. கொத்தமல்லிமல்லி இலை சிறிது
  14. தாளிக்க:
  15. எண்ணெய் 3 ஸ்பூன்
  16. கடுகு, உளுந்தம் பருப்பு 1/2 ஸ்பூன்
  17. பெரிய வெங்காயம் 1
  18. கருவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. சுண்டக்கடலையை தண்ணீரில் 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊற வைத்த சுண்டக்கடலையை தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு 4 விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
  3. நறுக்கிய கத்திரிக்காய், முருங்கைக்காயை குக்கரில் உள்ள சுண்டக் கடலையுடன் சேர்த்து 1 விசில் விட்டு இறக்கவும்.
  4. புளியை தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து கரைத்து வைக்கவும்.
  5. அரைக்க வேண்டிய தேங்காய் வெங்காயம் தக்காளி கருவேப்பிலை கொத்தமல்லி இலையை மிக்ஸியில் ஒவ்வொரு பொருளாக சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து பின் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  7. மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்க்கவும்.
  8. புளிக்கரைசல் மற்றும் குக்கரில் வேக வைத்த சுண்டக் கடலை கத்திரிக்காய் முருங்கைக்காயை சேர்க்கவும்.
  9. அரைத்த தேங்காயை சேர்த்துக் கொள்ளவும்.
  10. தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும்
  11. குழம்பு கொதித்ததும் உப்பு சேர்க்கவும்.
  12. அடுப்பை சிம்மில் வைத்து கொதி வந்ததும் இறக்கவும்.சுவையான சுண்டக்கடலை புளிக்குழம்பு தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maharasi Devendiran
Aug-02-2018
Maharasi Devendiran   Aug-02-2018

இது கருப்பு கொண்டகடலை தான

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்