வீடு / சமையல் குறிப்பு / ட்ரை கலர் சிக்கன் டிக்கா

Photo of Hyderabad street food tricolour chicken tikka by Sumaiya shafi at BetterButter
0
2
0(0)
0

ட்ரை கலர் சிக்கன் டிக்கா

Mar-30-2019
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

ட்ரை கலர் சிக்கன் டிக்கா செய்முறை பற்றி

ஹைதராபாத் தெரு கடை ஸ்பெஷல் மூவண்ண சிக்கன் டிக்கா

செய்முறை டாக்ஸ்

 • నాన్ వెజ్
 • మీడియం/మధ్యస్థ
 • రాత్రి విందు
 • హైదరాబాదీ
 • గ్రిల్లింగ్
 • సైడ్ డిషెస్
 • తక్కువ కొవ్వు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

 1. சிக்கன் டிக்கா செய்வதற்கு
 2. சிக்கன் போன்லஸ் 500 கிராம்
 3. தயிர் 2 டேபிள்ஸ்பூன்
 4. லெமன் ஜூஸ் 2 டேபிள்ஸ்பூன்
 5. உப்பு தேவைக்கேற்ப
 6. காஷ்மீர் மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
 7. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
 8. மல்லி தூள் அரை டீஸ்பூன்
 9. சோம்புத்தூள் அரைடீஸ்பூன்
 10. கரம் மசாலா அரை டீஸ்பூன்
 11. கலர் பொடி சிறிதளவு
 12. இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
 13. ஹரியாலி பச்சை டிக்கா செய்வதற்கு
 14. சிக்கன் போன்லெஸ் 500 கிராம்
 15. லெமன் 2 டேபிள்ஸ்பூன்
 16. தயிர் 2 டேபிள்ஸ்பூன்
 17. உப்பு தேவைக்கு ஏற்ப
 18. புதினா அரை கப்
 19. மல்லி இலை அரை கப்
 20. பச்சை மிளகாய் 4
 21. மலாய் சிக்கன் டிக்கா செய்வதற்கு
 22. சிக்கன் போன்லெஸ் 500 கிராம்
 23. லெமன் ஜூஸ் 2 டேபிள்ஸ்பூன்
 24. தயிர் 2 டேபிள்ஸ்பூன்
 25. உப்பு தேவைக்கு ஏற்ப
 26. ஃப்ரெஷ் கிரீம் 2 டீஸ்பூன்
 27. முந்திரி பேஸ்ட் 2 டீஸ்பூன்
 28. வெள்ளை மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
 29. மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
 30. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

 1. சிக்கன் டிக்கா(சிவப்பு) செய்வதற்கு
 2. சிக்கனை சிவப்பு மிளகாய்த்தூள்,உப்பு, சீரக தூள், கரம் மசாலா, மல்லி தூள்,தயிர்,லெமன் ஜூஸ்,இஞ்சி பூண்டு விழுது மற்றும் காஷ்மீர் மிளகாய் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
 3. மலாய் சிக்கன்(வெள்ளை) டிக்கா செய்வதற்கு
 4. சிக்கனை மிளகு தூள், வெள்ளை மிளகு தூள், உப்பு,தயிர்,லெமன் ஜூஸ், பிரஷ் க்ரீம்,இஞ்சி பூண்டு விழுது மற்றும் முந்திரி சேர்த்து கிளறிக் கொள்ளவும்
 5. ஹரியாலி சிக்கன் டிக்கா செய்வதற்கு
 6. மல்லி இலை,புதினா, பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டை நன்கு அரைத்துக் கொள்ளவும்
 7. சிக்கனை அரைத்த கலவை , தயிர் லெமன் ஜூஸ்,உப்பு சேர்த்து கிளறிக் கொள்ளவும்
 8. மூன்று வகையான சிக்கனையும் 6 முதல் 8 மணி நேரம் ஊறவைக்கவும்
 9. பின் கிரில் செய்யும் குச்சியில் எல்லாவற்றையும் குத்தி வைக்கவும்
 10. முன்பே 10 நிமிடம் சூடு செய்த அவனில் 150 டிகிரி பாரன்ஹீட்யில் 40 நிமிடம் வைத்து எடுக்கவும்
 11. பின் நெருப்பில் நேராக ஒரு நிமிடம் காட்டவும்
 12. லெமன் மற்றும் வெங்காயம் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்