வீடு / சமையல் குறிப்பு / டூரான் த கொகோ

Photo of Turron de coco by Kanwaljeet Chhabra at BetterButter
2127
7
5.0(0)
0

டூரான் த கொகோ

Oct-05-2016
Kanwaljeet Chhabra
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிறிஸ்துமஸ்
  • ஸ்பானிஷ்
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 1 கப் இனிப்பு சேர்க்கப்பட்டக் காய்ச்சியப் பால்
  2. ஒன்றரைக் கப் துருவப்பட்டத் தேங்காய்த் தூள்
  3. ஒரு சிட்டினை வெண்ணிலா எசென்ஸ்
  4. 1 கப் அடர் சாக்லேட் நறுக்கியது
  5. நறுக்கிய பாதாம் அல்லது பிஸ்தா பருப்பு பாதி கப்
  6. தேங்காயப் பால் 1/4 கப்

வழிமுறைகள்

  1. முதலில் செவ்வக டின்னை கிளங் தாளால் லைனிங் செய்துகொள்ளவும், எல்லா பக்கங்களிலும் அதிகம் தொங்குபடி செய்து எடுத்து வைக்கவும்.
  2. இப்போது அடர் சாக்லேட்ை ஒரு டபுள் பாய்லரில் அல்லது மைக்ரோவேவில் உருக்கிக்கொள்ளவும்.
  3. ஒரு கடாயை எடுத்து காய்ச்சியப் பால், தேங்காய் பால், துருவிய தேங்காய் சேர்க்கவும். கலவை கடாயைவிட்டு விலகும்வரை வேகவைக்கவும். இந்த நிலையில் வெண்ணிலாவைச் சேர்க்கவும்.
  4. இந்தக் கலவையை லைன் செய்யப்பட்ட கடாயில் ஊற்றி கரண்டியால் மென்மையான ஒரு அடுக்கை செய்துகொள்ளவும். பாதி உருக்கிய சாக்லேட்டை அதில் ஊற்றி கிளிங் தாளால் மூடவும். இந்த பிரிஜ்ஜில் 1 மணி நேரத்திற்கு வைக்கவும்.
  5. பிரிஜ்ஜில் இருந்து எடுத்து கிளிங் தாளைத் திறந்து திருப்பி, மீதமுள்ள உருக்கிய அடர் சாக்லேட்டை மேலே ஊற்றி, கொஞ்சம் பாதாம் அல்லது பிஸ்தாவால் அலங்கரிக்கவும். இதை மீண்டும் பிரிஜ்ஜில் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் வைக்கவும்.
  6. பிரிஜ்ஜில் இருந்து எடுத்து விரும்பிய வடிவத்திற்கு வெட்டிக்கொள்ளவும். துருவிய தேங்காயால் அலங்கரித்துக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்