வீடு / சமையல் குறிப்பு / முந்திரி கொத்து

Photo of Munthiri Kothu by Revathi Kannan at BetterButter
1949
10
0.0(0)
0

முந்திரி கொத்து

Nov-17-2015
Revathi Kannan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி மாவு 1 கப்
  2. உப்பு 1 தேக்கரண்டி
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  4. தண்ணீர் 1 கப்
  5. பச்சை பாசிப்பருப்பு மாவு 250 கிராம்
  6. தேங்காய் 1 கப்
  7. ஏலக்காய் 3 பற்கள்
  8. வெல்லம் 200 கிராம்
  9. நன்றாக பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் பச்சைப்பருப்பை 8-9 நிமிடங்களுக்கு நடுத்தர தீயில் பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.
  2. துருவிய தேங்காயை எண்ணெய்விடாமல் அடர் பழுப்பு நிறம் வரும்வரை வறுக்கவும், கருக விடக்கூடாது. இது முந்திரி கொத்தை நீண்ட நாட்கள் வைத்துக்கொள்ள உதவும்.
  3. வறுத்த பச்சைப்பருப்பை கரடுமுரடாக உடைத்துக்கொள்ளவும், மாவாக இருக்கக்கூடாது. ஆனால் ரவா பதத்தில் இருக்கவேண்டும்.
  4. வெல்லத்தை கொதிக்கவிடவும். முதலில் தூசியை நீக்கிவிட்டு இதை அடர்த்தியான பாகாகத் தயாரித்துக்கொள்ளவும். கம்பி போல் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.
  5. பச்சை பாசிப்பருப்புத் தூள், வறுத்த தேங்காய், நசுக்கப்பட்ட ஏலக்காயை ஒரு கலவை பாத்திரத்தில் எடுத்துக்கொள்க.
  6. வெல்லப் பாகை எடுத்து அவற்றோடு கலந்துகொள்ளவும்.
  7. சமமான அளவுள்ள உருண்டைகளாகத் தயாரித்துக்கொள்ள, பாகு சூடாக இருக்கும்போதே.
  8. ஒரு பருத்தித் துணியில் மூடி உருண்டைகளை 5 மணிநேரம் உலர்த்தவும்.
  9. அரிசி மாவு, மஞ்சள், உப்பு எடுத்துக்கொள்ளவும். மாவில் கொஞ்சம் தண்ணீர சேர்த்து அனைத்து சேர்வைப்பொருள்களையும் கலக்கவும்.
  10. மொத்தமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் எண்ணெயுடன் சூடுபடுத்தி மாவில் உருண்டைகளை முக்கி சூடான எண்ணெயில் பொரிக்கவும்.
  11. அடுத்த பக்கத்தை வறுக்க ஒரு முறை திருப்பிப்போடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்