வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ வடை

Photo of Banana flower vada by Subha Prakash at BetterButter
1576
23
3.0(0)
0

வாழைப்பூ வடை

Nov-21-2015
Subha Prakash
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைப்பூ - 1
  2. கடலைப்பருப்பு - 1 கப்
  3. துவரம் பருப்பு - 1 கப்
  4. பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
  5. பச்சை மிளகாய் - 5
  6. வெங்காயம் - 2
  7. கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
  8. சுவைக்கேற்ற உப்பு
  9. எண்ணெய் - தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பையும் துவரம்பருப்பையும் இரண்டு மணி நேரத்திற்கு ஊறவைக்கவும். அதன்பிறகு தண்ணீரை முழுமையாக வடிகட்டிவிட்டு, கொஞ்சம் வறுத்த பருப்பு, பச்சை மிளகாய், பெருஞ்சீரகம் சேர்த்து எல்லாவற்றையும் கரடுமுரடாக மிக்சியில் தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும்.
  2. வாழைப்பூவை சுத்தப்படுத்தவும். சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும் அல்லது மிக்சியில் ஒரு முறை ஓட்டி எடுத்து வைக்கவும். (வாழைப்பூவை பயன்படுத்தும் வரை தண்ணீர் கலந்து தயிரில் வைக்கவும், நிறம் மங்காமல் இருக்க). பருப்பை அரைக்கும்போது வாழைப்பூவையும் போடலாம்.
  3. அரைத்த கலவையுடன், உப்பே சேர்த்து நன்றாக நறுக்கப்பட்ட வெங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றை சேர்த்து கலக்கிக்கொள்ளவும்.
  4. அதிலிருந்து உருண்டை தயாரித்து தட்டி எண்ணெயில் பொரிக்கவும். சாதம் சாம்பாருடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்