வீடு / சமையல் குறிப்பு / குலாப் ஜாமுன் மிக்ஸ் பிஸ்கட்ஸ்

Photo of Gulab Jamun Mix Biscuits by App Play at BetterButter
575
3
0.0(0)
0

குலாப் ஜாமுன் மிக்ஸ் பிஸ்கட்ஸ்

Nov-12-2017
App Play
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குலாப் ஜாமுன் மிக்ஸ் பிஸ்கட்ஸ் செய்முறை பற்றி

Kids Recipes

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 200 g – இன்ஸ்டன்ட் குலாப் ஜாமுன் மிக்ஸ் (ஏதாவது ஒரு பிராண்டு)
  2. 8 to 10 tsp – சர்க்கரைப் பொடி
  3. 1 tsp – நெய்
  4. 4 to 5 tbsp – தண்ணீர்
  5. தூவுவதற்கு மைதா
  6. பொரிக்க எண்ணெய்

வழிமுறைகள்

  1. இன்ஸ்டன்ட் மிக்ஸில் சர்க்கரைப் பொடியை கலக்கவும்.
  2. ஸ்பூனால் தண்ணீர் தெளித்துத் தெளித்து மாவை மென்மையாக பிசையவேண்டும்.
  3. சர்க்கரைப் பொடி சேர்ப்பதால் மாவு கையில் ஒட்டும்.
  4. அதனால் நெய்யை தடவிக்கொண்டு மிருதுவாக பிசையவேண்டும்.
  5. பிசைந்த மாவை கால் மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.
  6. ஒரு சப்பாத்தி செய்யும் அளவு மாவை உருட்டி எடுத்து மைதா தூவி மெல்லிய சப்பாத்தியாக இட்டுக் கொள்ளவும்.
  7. எல்லா மாவையும் இப்படி சப்பாத்தியாக செய்து கத்தியால் டயமன்ட்களாக வெட்டி எண்ணெயில் பொரிக்கவும்.
  8. நான் இங்கே குக்கி கட்டரால் கட் செய்துள்ளேன்.
  9. பொரிக்க விரும்பாதவர்கள் Ovenல் 180 degree யில் 5 to 6 நிமிடங்கள் வரை பேக் செய்யலாம்.
  10. படத்தில் வெளுப்பாக இருப்பவை பேக் செய்தவை, அழுத்தமான நிறத்தில் இருப்பவை எண்ணெயில் பொரிந்தவை.
  11. என்னைப் பொறுத்தவரை சுவையில் எண்ணெயில் பொரித்தவைதான் முதலிடம்.
  12. விரும்பினால் ஏலத்தூளையும் சேர்க்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்