வீடு / சமையல் குறிப்பு / சிவப்பு அரிசி ப்ருட் & நட் கேக்

Photo of Red rice flour fruit and nut cake by saranya sathish at BetterButter
731
4
0.0(0)
0

சிவப்பு அரிசி ப்ருட் & நட் கேக்

Nov-30-2017
saranya sathish
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிவப்பு அரிசி ப்ருட் & நட் கேக் செய்முறை பற்றி

சிவப்பு அரிசி மாவு வெல்லம் சேர்த்து செய்த வித்தியாசமான சத்தான கேக்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிவப்பு அரிசி மாவு - 1 கப்
  2. பேக்கிங் பவுடர் - 3/4 டீஸ்பூன்
  3. பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
  4. கெட்டி தயிர் - 1/2 கப்
  5. பாதாம், ட்டுட்டி ப்ருட்டி, முந்திரி, உலர்ந்த திராட்சை - 1 கப்
  6. எண்ணெய் - 6 டேபிள் ஸ்பூன்
  7. வெல்லம் பாகு - 1/2 கப்
  8. வெண்ணிலா எசன்ஸ்ச் - 1 தேக்கரண்டி
  9. இலவங்கம் பொடி - 1/4 தேக்கரண்டி
  10. ஜாதிக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
  11. பால் - சிறிது
  12. உப்பு - ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. சிவப்பு அரிசி மாவு, பேக்கிங் சோடா, உப்பு மற்றும் பேக்கிங் பவுடரை 5 முறை சலிக்கவும்.
  2. ஓவனை 180° இல் 10 நிமிடம் சூடு செய்யவும்.
  3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய், வெண்ணிலா எசன்ஸ்ச்,வெல்லம் பாகு, ஜாதிக்காய் பொடி,இலவங்கம் பொடி, தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  4. பின் சலித்து வைத்த மாவை சேர்த்து மெதுவாக கலந்துவிடவும்.
  5. ட்டுட்டி ப்ருட்டி, பாதாம், முந்திரி, திராட்சையில் சிறிது அரிசி மாவு சேர்த்து கலக்கவும். இது பழங்களை கேக் அடியில் சென்று தங்குவதை தவிர்க்கும். பின் மாவு கலவையில் பழங்களை சேர்த்து ஒருமுறை கலக்கவும்.
  6. சிறிது பால் சேர்த்து கலக்கவும்.
  7. இப்போது பேக்கிங் டின்னை கிரீஸ் செய்து கேக் மாவை ஊற்றி ஓவனில் 35 நிமிடம் பேக் செய்யவும்.
  8. பின் நன்றாக ஆறவைத்து துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்