வீடு / சமையல் குறிப்பு / தக்காளி தால்

Photo of Tomato Dal by Muthulakshmi Madhavakrishnan at BetterButter
289
3
0.0(0)
0

தக்காளி தால்

Dec-31-2017
Muthulakshmi Madhavakrishnan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தக்காளி தால் செய்முறை பற்றி

தக்காளி டால் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இதற்கு மசூர் பருப்பு அல்லது துவரம் பருப்பு சேர்த்து செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 6 தக்காளி
  2. 4 பச்சை மிளகாய்
  3. 1 வெங்காயம், பொடியாக நறுக்கவும்
  4. 7 பூண்டு பற்கள், பொடியாக நறுக்கவும்
  5. 1/4 கப் துவரம் பருப்பு
  6. 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  7. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1/4 டீஸ்பூன் கடுகு
  9. 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  10. 1/4 டீஸ்பூன் சீரகம்
  11. 1 காய்ந்த மிளகாய்
  12. கொத்தமல்லி இலை
  13. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  14. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு சிறிய குக்கரில் கழுவிய துவரம் பருப்பை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின் அதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி 3 விசில் வேகவைக்கவும்.
  2. அவை வெந்ததும் நன்றாக ஆறவிடவும். பின் வெந்த தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து மிக்ஸியில் லேசாக அரைக்கவும்.
  3. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சீரகம், மிளகாய் வற்றல் சேர்த்து தாளித்து பின் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  4. அவை வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். 
  5. பின் வேகவைத்த பருப்பு, மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  6. டால் நன்கு கொதித்ததும் பெருங்காயத்தூள் சேர்த்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்