Photo of Mixed Fruit Jam by Ashwini Rajendran at BetterButter
644
3
0.0(0)
0

பழம் ஜாம்

Feb-11-2018
Ashwini Rajendran
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
80 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பழம் ஜாம் செய்முறை பற்றி

8 வகை பழங்களின் நன்மையோடு, நாட்டு சக்கரை சேர்த்து இனிப்பூட்ட பட்ட ஜாம். பதப்படுத்த தேவையான ரசாயனம், செயற்கை நிறம் சேர்க்காமல் தயாரித்தது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • சிம்மெரிங்
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. நாட்டு சக்கரை 300 கிராம்
  2. உப்பு 1/2 தேக்கரண்டி
  3. எலுமிச்சை சாறு 1 மேசைக்கரண்டி
  4. தண்ணீர் 1/2 கின்னம்
  5. தர்பூசணி 2 பெரிய துண்டு
  6. வாழைப்பழம் 2 பெரியது
  7. அன்னாசி பழம் 3 துண்டு
  8. ஆப்பிள் 1
  9. கருப்பு திராட்சை 250 கிராம்
  10. ஆரஞ்சு 1
  11. மாதுளை பழம் 1
  12. ஸ்ட்ராபெர்ரி 2 சிறிய பெட்டி

வழிமுறைகள்

  1. ஸ்ட்ராபெர்ரி இலை நீக்கி தண்ணீரில் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  2. மற்ற அனைத்து பழங்களையும் தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
  3. ஒரு கனமான பாத்திரத்தில் அனைத்து பழங்களையும் சேர்த்து தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் சிறிய தீயில் வேக வைக்கவும்.
  4. வெந்த பழங்களை நன்கு ஆற வைக்கவும்.
  5. ஆறிய பின் மிக்ஸியில் மைய விழுதாக அரைக்கவும்.
  6. அரைத்த விழுதை அடி கனமான பாத்திரத்தில் போட்டு பெரிய தீயில் வைக்கவும்.
  7. கொதிக்கும் வரை கை விடாமல் கிளறவும்.
  8. கொதி வந்தவுடன் கிளறுவதை நிறுத்தி விட்டு, சிறிய தீயாக குறைக்க வேண்டும்.
  9. 5 நிமிடம் கழித்து ஒன்று பின் ஒன்றாக உப்பு, எலுமிச்சை சாறு, சக்கரை சேர்த்து கிளறவும்.
  10. இதற்கு மேல் 10 நிமிடத்திற்கு ஒரு முறை தான் கிளற வேண்டும்.
  11. தண்ணீர் நன்கு சுன்ட சுமார் 1 மணி நேரம் தேவைப்படும்.
  12. தண்ணீர் சுன்டிய பின், ஜாம் பதம் சற்று கெட்டியாக வந்தவுடன் அடுப்பை அனைத்து விட வேண்டும்.
  13. ஜாம் ஆறிய பின் சுத்தமான டப்பாவில் மாற்றி, பிரிட்ஜில் வைத்து கொள்ள வேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்