Photo of Claypot Fish curry by Juvaireya R at BetterButter
397
7
0.0(1)
0

Claypot Fish curry

May-10-2018
Juvaireya R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Claypot Fish curry செய்முறை பற்றி

அம்மியில் அறைத்து ,மண்சட்டியில் சமைத்த சுவையான மீன் குழம்பு.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கட்லா மீன் -1 கிலோ
  2. வெங்காயம்- 1/2 கப்
  3. சிறிதளவு வெள்ளைபூண்டு
  4. சீரகம் -1 தேக்கரண்டி
  5. வெந்தயம் -1/4 தேக்கரண்டி
  6. மிளகு - 1/2 தேக்கரண்டி
  7. நல்லெண்ணெய் -2 மேஜைக்கரண்டி
  8. தக்காளி -3
  9. புளி கரைசல் - 1/2 கப்
  10. மிளகாய் பொடி-2 தேக்கரண்டி
  11. மல்லித்தூள் -2 தேக்கரண்டி
  12. சிறிதளவு மல்லிஇலை
  13. சிறிதளவு கறிவேப்பில்லை
  14. தேங்காய்துருவல் -1/2 கப்

வழிமுறைகள்

  1. மண்பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
  2. எண்ணெய் காய்ந்ததும் வெந்தயம்,சீரகம்,மிளகு சேர்க்கவும்.
  3. பின் சிறிது சின்ன வெங்காயம்,வெள்ளைபூண்டு சேர்த்து வதக்கவும்.
  4. 3நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
  5. நன்கு வதங்கியதும் புளிகரைசல் சேர்க்கவும்.
  6. பின் மிளகாய் பொடி,மல்லிபொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
  7. அம்மியில் சிறிது வெங்காயம், சீரகம்,தேங்காய் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  8. அரைத்த விழுதை புளிகரைசலில் சேர்க்கவும்.
  9. சிறிது கறிவேப்பிலை சேர்த்து கொதிக்கவிடவும்.
  10. குழம்பு ரெடியானதும் கழுவிய மீன்களை சேர்த்து 3 நிமிடம் வேகவிடவும்.
  11. மீன் வெந்ததும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கவும்.
  12. மண் மணம் மாறாத மண்ச்சட்டி மீன் குழம்பு தயார். சூடான சாதத்தொடு அருமையாக இருக்கும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
May-11-2018
Pushpa Taroor   May-11-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்