Home / Recipes / Coconut Flour Biscuit Cake

Photo of Coconut Flour Biscuit Cake by Ayesha Ziana at BetterButter
1037
4
0.0(0)
0

Coconut Flour Biscuit Cake

Oct-03-2017
Ayesha Ziana
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coconut Flour Biscuit Cake RECIPE

தேங்காய்ப்பொடி, பிஸ்கட், மற்றும் சில எளிய பொருட்களால் செய்த குக்கர் கேக்.

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Kids Recipes
  • Fusion
  • Baking
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. பிஸ்கட் 12
  2. தேங்காய்ப்பொடி 1/4 கப்
  3. பிரட் பொடி 1/3 கப்
  4. பொடித்த சீனி 1/3 கப்
  5. உருக்கிய நெய் 2 ஸ்பூன் மற்றும் தடவ
  6. இளஞ்சூடு பால் 1/4 முதல் 1/3 கப்
  7. முட்டை 2
  8. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சில துளிகள்
  9. சோடா உப்பு 1/2 ஸ்பூன்
  10. தேன்(தேவைப்பட்டால்) அலங்கரிக்க

Instructions

  1. வழக்கமாகத் தேங்காய்ப்பால் பிழிந்த பிறகு கிடைக்கும் தேங்காய் பீரையை வறுத்துப்பொடித்தால் தேங்காய்ப்பொடி தயார். இதில் 1/4 கப் எடுக்கவும்.
  2. பிரட்டை லேசாக வறுத்து பொடித்தால் பிரட் பொடி தயார். இதில் 1/3 கப் எடுக்கவும்.
  3. பிஸ்கட்டைப் பொடித்து, அதனுடன் தேங்காய்ப்பொடி, பிரட் பொடி, சோடா உப்பு, பொடித்த சீனி சேர்த்து ஒரு பாத்திரத்தில் கலந்து வைக்கவும்.
  4. முட்டையை நன்றாக அடித்து, அதையும் சேர்க்கவும்.
  5. இளஞ்சூடு பாலையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேவைக்கேற்ப சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.
  6. உருக்கிய நெய் மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து கேக் மாவு பதம் வரும் வரை மெதுவாகக் கலக்கவும்.
  7. கேக் செய்யும் அலுமினியப் பாத்திரத்தில் நெய் தடவி, கேக் மாவை ஊற்றவும்.
  8. ஒரு குக்கரில் கால் பங்கு மணல் பரத்தி ஹை தீயில் 10 நிமிடம் மூடி வைக்கவும்.
  9. பின், மூடியைத் திறந்து, கேக் பாத்திரத்தை மணல் மேல் வைத்து குக்கரை விசில் இல்லாமல் மூடி வைத்து 30 நிமிடம் சிம்மில் வைக்கவும்.
  10. கேக் வெந்தவுடன், பாத்திரத்தைக் கவனமாக வெளியே எடுத்து, ஆறிய பின் தட்டில் கவிழ்த்து, தேவைப்பட்டால் தேன் ஊற்றிப் பரிமாறவும். சுவையான கேக் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE