Home / Recipes / Sardines fish curry

Photo of Sardines fish curry by Asiya Omar at BetterButter
949
3
0.0(0)
0

Sardines fish curry

Oct-17-2017
Asiya Omar
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sardines fish curry RECIPE

மீன் குழம்பில் ருசி மிக்கது சாளை மீன் குழம்பு. தேங்காய் சேர்க்காமல் செய்த குழம்பு இது.

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. சாளை மீன் - கால் கிலோ (8-10 மீன்கள்)
  2. பெரிய வெங்காயம் -1 அல்லது சின்ன வெங்காயம் 15
  3. பூண்டு - 5 பற்கள்
  4. தக்காளி -1
  5. பச்சை மிளகாய் -2
  6. நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
  7. கடுகு,வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்
  8. கருவேப்பிலை - 2 இணுக்கு
  9. மீன் மசாலா - 1 டேபிள்ஸ்பூன்(குவியலாக)
  10. அல்லது மல்லித்தூள் -1-2 டீஸ்பூன்,மிளகாய்த்தூள் 1 -2 டீஸ்பூன்
  11. சீரகத்தூள் - அரைடீஸ்பூன்,மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்
  12. புளி - சிறிய எலுமிச்சை அளவு
  13. நறுக்கிய மல்லி இலை சிறிது.
  14. உப்பு - தேவைக்கு.

Instructions

  1. மீனின் தலை,வயிற்றை கத்திரிக்கோல் கொண்டு வெட்டி வயிற்றை சுத்தம் செய்து,செதில் எடுத்து நன்கு அலசி வைக்கவும்.
  2. புளியைக்கரைத்து வைக்கவும்.வெங்காயம்,பூண்டு மிகப்பொடியாக நறுக்கி வைக்கவும்.தக்காளியை பொடியாக நறுக்கி கையால் பிணைந்து வைக்கவும்.மிளகாய் கீறி வைக்கவும்.
  3. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை வெடிக்க விடவும்,வெங்காயம் பூண்டு பொன்னிறமாக வதக்கவும்.தக்காளி,பச்சை மிளகாய்,சிறிது உப்பு சேர்த்து மூடி சிம்மில் வைத்து கூட்டு போல் ஆக வேண்டும்.
  4. மசாலா தூள்கள் சேர்க்கவும்.பிரட்டி விட்டு புளிக்கரைசல் விடவும்.நன்கு கொதித்து பச்சை வாடை போக வேண்டும்.உப்பு சரி பார்க்கவும்.
  5. மீனைப் போடவும்.வெந்து மேலே வந்தவுடன் அடுப்பை சிம்மில் சிறிது வைத்து அணைக்கவும்.
  6. சுவையான சுலபமாகச் செய்யக் கூடிய மீன் குழம்பு தயார்.இதற்கு தேங்காய் சேர்க்கவில்லை.
  7. இதனை வெறுஞ்சோறு,இட்லி,தோசையுடன் பரிமாறலாம்.நறுக்கிய மல்லி இலை தூவி அலங்கரிக்கலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE