Home / Recipes / Dal pulav

Photo of Dal pulav by Asiya Omar at BetterButter
1129
5
0.0(0)
0

Dal pulav

Nov-22-2017
Asiya Omar
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Dal pulav RECIPE

பருப்பு,பச்சரிசி சேர்த்து புலாவ் செய்வது போல் குக்கரில் மணக்க மணக்க செய்வது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Main Dish

Ingredients Serving: 2

  1. பச்சரிசி அல்லது பாசுமதி அரிசி -200 கிராம்
  2. துவரம் பருப்பு -50 கிராம்
  3. இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 தேக்கரண்டி குவியலாக
  4. கரம் மசாலா - கால் தேக்கரண்டி
  5. சோற்று இலை - (ரம்பை இலை) நறுக்கிய துண்டு -2
  6. வெங்காயம் -1
  7. தக்காளி -1
  8. பச்சை மிளகாய் -2
  9. மஞ்சள் தூள் ,மிளகாய்த்தூள் - தலா கால் தேக்கரண்டி
  10. மல்லி,புதினா இலை -சிறிது
  11. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  12. நெய் -2 தேக்கரண்டி
  13. உப்பு -தேவைக்கு.

Instructions

  1. அரிசி பருப்பை 20 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. குக்கரில் எண்ணெய் ,நெய் விட்டு நறுக்கிய வெங்காயம் ,ரம்பை இலை சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
  3. தக்காளி,மல்லி,புதினா,கீரிய பச்சை மிளகாய் சேர்க்கவும.உப்பு சேர்த்து நன்கு வதங்க விடவும்.மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் சேர்க்கவும்.கூட்டு போல் ஆக வேண்டும்
  4. அரிசியின் அளவிற்கு இரண்டு அளவு தண்ணீர் வைக்கவும்.
  5. கொதி வரவும் அரிசி ,பருப்பை சேர்க்கவும்.வெயிட் போடவும்.
  6. முதல் விசில் வரவும் அடுப்பைக் குறைத்து ஏழு நிமிடம் வைக்கவும்.அடுப்பை அணைக்கவும்.ஆவியடங்கியவுடன் திறக்கவும்.பிரட்டி பரிமாறவும்.
  7. சுவையான பருப்பு சோறு தயார்.புதினா துவையலுடன் பரிமாறலாம்.லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்றது.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE