Home / Recipes / Sprouts and Paneer Dal

Photo of Sprouts and Paneer Dal by Muthulakshmi Madhavakrishnan at BetterButter
479
3
0.0(0)
0

Sprouts and Paneer Dal

Jan-02-2018
Muthulakshmi Madhavakrishnan
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. 200 கிராம் பனீர்
  2. 1/2 கப் முளைப்பயறு
  3. 1/4 கப் பாசிப்பருப்பு
  4. 1 தக்காளி
  5. 8 பூண்டு பற்கள்
  6. சிறிய துண்டு இஞ்சி
  7. 1 பச்சை மிளகாய்
  8. 2 காய்ந்த மிளகாய்
  9. 1 டீஸ்பூன் சீரகம்
  10. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  12. 1 டேபிள் ஸ்பூன் உலர்ந்த வெந்தயக்கீரை
  13. 1 எலுமிச்சை பழம்
  14. சிறிது கொத்தமல்லி இலை
  15. உப்பு
  16. 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  17. 1 டேபிள் ஸ்பூன் நெய்

Instructions

  1. பனீரை சிறு சிறு சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும். பின் இளம் சூடான தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு எடுக்கவும்.
  2. பின் ஒரு பேனில் சிறிது எண்ணெய் விட்டு பனீர்‌ துண்டுகளை பொன்னிறமாக வறுக்கவும். 2 நிமிடங்களுக்கு ஒரு முறை திருப்பி திருப்பி பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
  3. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும். முளைப்பயறை நன்றாக கழுவி தண்ணீரை வடிகட்டவும்.
  4. பாசிப்பருப்பை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின் குக்கரில் 3 முதல் 5 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.
  5. கடாயில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு பொரிந்ததும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  6. பின் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  7. அவை நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  8. இப்போது முளைப்பயறை சேர்த்து நன்கு வதக்கவும்.
  9. இந்த பருப்பை வதக்கியவற்றோடு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  10. பின் 1 கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  11. டால் கொதிக்க ஆரம்பித்ததும் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
  12. டால் கெட்டியான பின் வறுத்த பனீர்‌ துண்டுகளை சேர்த்து கிளறவும். மெதுவாக கிளறவும்.
  13. பனீர் துண்டுகள் நன்கு கலந்த பின் உலர்ந்த வெந்தயக்கீரை சேர்த்து சிறிது நேரம் லேசாக கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும்
  14. எலுமிச்சை சாறு பிழிந்து மெதுவாக கலந்து விடவும்.
  15. கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE