Home / Recipes / Panchavarna Vegetable Halwa

Photo of Panchavarna Vegetable Halwa by Ayesha Ziana at BetterButter
912
10
0.0(0)
0

Panchavarna Vegetable Halwa

Feb-17-2018
Ayesha Ziana
10 minutes
Prep Time
60 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Panchavarna Vegetable Halwa RECIPE

5 நிறங்களை உடைய காய்கறிகளைக் கொண்டு செய்த வித்தியாசமான அல்வா. மிகவும் சுவையானது, ஆரோக்கியமானதும் கூட.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Blending
  • Boiling
  • Sauteeing
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. கத்தரிக்காய் 1 கப்
  2. வாழைக்காய் 1
  3. பரங்கிக்காய் 3/4 கப்
  4. கேரட் 3/4 கப்
  5. உருளைக்கிழங்கு 3/4 கப்
  6. பால் 1/2 லிட்டர்
  7. தண்ணீர் 1/4 கப்
  8. எலுமிச்சை 1/4
  9. சீனி 1 கப்
  10. நெய் 3 முதல் 4 டேபிள் ஸ்பூன்
  11. ஏலக்காய் 2 முதல் 3
  12. பாதாம்/அண்டி தேவைக்கேற்ப
  13. கிஸ்மிஸ்(வேண்டுமானால்)

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் கத்தரிக்காயைத் தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக வேக விடவும். பின்னர் தோலுரித்துக் கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் பாலைத் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, பின்னர் சிம்மில் வைத்து, நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, பரங்கிக்காய் மற்றும் வாழைக்காய் சேர்த்து சிம்மில் வேக விடவும். இடையிடையே கிளறவும்.
  3. பால் முழுவதும் வற்றியதும் அடுப்பை அணைத்து விட்டு, சிறிது ஆறியதும், மிக்ஸியில் இந்த கலவையையும், கத்தரிக்காயையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைக்கவும்.
  4. பின், அந்த கடாயில் சிறிது நெய் ஊற்றி, அரைத்த கலவையை சேர்த்து சிம்மில் வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும். இடையிடையே சிறிது சிறிதாக நெய் ஊற்றி கிளறவும்.
  5. கலவை சற்று இறுகியதும் சீனி சேர்த்து மீண்டும் விடாமல் கிளறி கொண்டே இருக்கவும். இடையிடையே சிறிது நெய் ஊற்றி கிளறவும்.
  6. கலவை இறுகி பாத்திரத்தில் ஒட்டாமல் வர ஆரம்பிக்கும்போது தட்டிய ஏலக்காய் சேர்த்து மீண்டும் சில நிமிடங்கள் கிளறி, அடுப்பை அணைத்து, நெய் தடவிய தட்டில் ஊற்றவும், அல்லது பவுலில் வைத்தும் பரிமாறலாம். மேலே பாதாம் அல்லது நெய்யில் வதக்கிய அண்டி சேர்த்து அலங்கரித்துக் கொள்ளவும்.
  7. சூப்பரான ஆரோக்கியமான பஞ்சவர்ண காய்கறி அல்வா தயார். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE